20 வது தராவீஹ்
இஸ்திகாமத்
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ (30) حم السجدة
قَالَ الزُّهْرِيّ: تَلَا عُمَر رَضِيَ اللَّه عَنْهُ هَذِهِ الْآيَة عَلَى الْمِنْبَر ثُمَّ قَالَ اِسْتَقَامُوا وَاَللَّه لِلَّهِ بِطَاعَتِهِ وَلَمْ يَرُوغُوا رَوَغَان الثَّعَالِب1 -عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا قَالُوا رَبّنَا اللَّه ثُمَّ اِسْتَقَامُوا"عَلَى أَدَاء فَرَائِضه وَكَذَا قَالَ قَتَادَة قَالَ وَكَانَ الْحَسَن يَقُول اللَّهُمَّ أَنْتَ رَبّنَا فَارْزُقْنَا الِاسْتِقَامَة (تفسير ابن كثير
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَدِّدُوا وَقَارِبُوا وَاعْلَمُوا أَنْ لَنْ يُدْخِلَ أَحَدَكُمْ عَمَلُهُ الْجَنَّةَ وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ (بخاري
பொருள்- அமல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானது குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதாகும்
عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ خَيْرًا اسْتَعْمَلَهُ فَقِيلَ كَيْفَ يَسْتَعْمِلُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يُوَفِّقُهُ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ الْمَوْتِ (ترمذي - كِتَاب الْقَدَرِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
தொடர்படியான அமல் நல்ல மவ்த் ஏற்பட காரணமாக அமையும். ஒரு அடியானை அல்லாஹ் விரும்பினால் தொடர்ந்து நற்செயலுக்கான வாய்ப்பை வழங்கி அந் நிலையில் அவரை மவ்த்தாக்குவான்
மிஃராஜில் சுவனத்தில் பிலால் ரழி அவர்களின் காலடித்தடத்தை நபி ஸல் அவர்கள் காதில் கேட்டதற்கு காரணம் உளூ என்ற நற்செயலை அவர்கள் தொடர்ந்து செய்தது தான்
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْفَجْرِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الْإِسْلَامِ فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ (بخاري
முனாஃபிக்கின் அடையாளம் எந்த நற்செயலையும் தொடர்ந்து செய்ய மாட்டான் ஒருவரிடம் நிஃபாக் இல்லை என்பதற்கான அடையாளம் எல்லா நேரத்திலும் வணங்குவது தான்
إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا (142)مُذَبْذَبِينَ بَيْنَ ذَلِكَ لَا إِلَى هَؤُلَاءِ وَلَا إِلَى هَؤُلَاءِ والمذبذب : المضطرب الذي لا يبقى على حالة مستقلة. عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَثْقَلَ صَلَاةٍ عَلَى الْمُنَافِقِينَ صَلَاةُ الْعِشَاءِ وَصَلَاةُ الْفَجْرِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ آمُرَ رَجُلًا فَيُصَلِّيَ بِالنَّاسِ ثُمَّ أَنْطَلِقَ مَعِي بِرِجَالٍ مَعَهُمْ حُزَمٌ مِنْ حَطَبٍ إِلَى قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ بِالنَّارِ (مسلم)
தொழுகையாளிகள் ஐந்து வகை
அல்லாமா இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். தொழுகையாளிகள் ஐந்து வகையினர். 1.தொழுகையில் அநியாயக்காரர்கள் இவர்கள் விட்டு விட்டு தொழுவார்கள். அல்லது ஜும்ஆ ஈத் ஆகிய முக்கிய தினங்களில் மட்டுமே தொழுவார்கள். தொழுகை தவறியதற்காக கவலைப்பட மாட்டார்கள். இவர்களுக்கு அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு. 2.இவர்கள் தவறாமல் தொழுபவர்கள். பாங்கு சொன்னவுடன் மஸ்ஜிதுக்கு வருபவர்கள். எனினும் தொழ ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை சிந்தனைகள் வெளியே இருக்கும். அதை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்ய மாட்டார்கள். இவர்களும் மிகக் கடுமையாக அல்லாஹ்விடம் விசாரிக்கப்படுவார்கள். 3. இவர்களும் தவறாமல் தொழுபவர்கள் தான். இவர்களுக்கு தொழுகையில் வேறு சிந்தனைகள் சில நேரம் வரும். எனினும் அதை கட்டுப்படுத்த முடிந்த வரை முயற்சிப்பார்கள். இவர்களுக்கு தொழுகையின் நன்மைகள் கிடைக்கா விட்டாலும் இவர்களின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படலாம். 4.இவர்களும் தொழுகையாளிகள் தான். ஆனால் முழுக்க முழுக்க தொழுகையில் வெளி சிந்தனைகள் இன்றி கவனமாக தொழுவார்கள். இவர்கள் தான் தொழுகைக்கான நன்மைகள் வழங்கப்படுபவர்கள். 5.இவர்கள் இறைநேசர்கள் இவர்கள் தொழ ஆரம்பித்தால் அல்லாஹ்வின் அன்பில் முற்றிலுமாக மூழ்கி அல்லாஹ் தன் முன் இருப்பது போன்று தொழுவார்கள் இவர்களே மற்ற அனைவரையும் விட மேலானவர்கள்- நூல் வாபிலுஸ் ஸய்யிப்
சிறந்த முஃமின் நிறைய அமல்கள் செய்தாலும் அதை குறைவாக கருதுவதுடன் தன்னிடம் நிஃபாக் வந்து விடுமோ என்று பயப்படுவார். ஆனால் முனாஃபிக் சீசனில் மட்டும் தொழுவான். நிறைய அமல் செய்ததாக எண்ணுவான். அவனிடம் நிஃபாக் பயம் இருக்காது
يقول الحسن البصري: "ما أمن النفاق إلا منافق، وما خاف النفاق إلا مؤمن"
عَنْ عَائِشَةَ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ (الَّذِينَ يُؤْتُونَ مَا أَتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ) أَهُوَ الرَّجُلُ يَزْنِى وَيَسْرِقُ وَيَشْرَبُ الْخَمْرَ قَالَ « لاَ يَا بِنْتَ أَبِى بَكْرٍ أَوْ لاَ يا بِنْتَ الصِّدِّيقِ وَلَكِنَّهُ الرَّجُلُ يَصُومُ وَيُصَلِّى وَيَتَصَدَّقُ وَهُوَ يَخَافُ أَنْ لا يُقْبَلَ مِنْهُ ».(مسند احمد
செய்வதை செய்து கொண்டே சிலர் அல்லாஹ்வை மிகவும் அஞ்சுவார்கள் என்ற வசனத்தைப் பற்றி ஆயிஷா ரழி அவர்கள் நபி ஸல் அவர்களிடம் யாரஸூலல்லாஹ் கெட்ட காரியங்களை செய்து கொண்டே அல்லாஹ்வையும் அஞ்சுவார்கள் என்பது இதன் பொருளா என்று கேட்க, அதற்கு நபி ஸல் அவர்கள் அவ்வாறல்ல.. ஒருவர் எல்லா நற்காரியங்களையும் நிறைய செய்வார் ஆனால் அவர் மனதில் அதை குறைவான அமலாக கருதுவதுடன், தன்னிடம் நிஃபாக் வந்து விடுமோ என்று அஞ்சுவார். அவரைப் பற்றி இவ்வசனம் பேசுகிறது என்றார்கள்
இஸ்திகாமத் இல்லாதவர்களிடம் சில கேள்விகள்
வியாபாரிகளுக்குக் கூட சீசன் இருக்கிறது. அவர்களுக்கு மற்ற நேரங்களில் சாதாரணமாக வியாபாரம் நடைபெறும். சீசன் நேரங்களில் அதிகமாக வியாபாரம் நடைபெறும் ஆனால் இங்கே ஒரு கேள்வி ? ஒரு வியாபாரி சீசன் நேரத்தில் மட்டுமே கடையை திறக்கிறார். மற்ற நேரங்களில் அவர் கடையை மூடியே வைத்திருக்கிறார். கடையை திறப்பதில்லை. இவருக்கு சீசன் வியாபாரம் கை கொடுக்குமா? நிச்சயமாக கை கொடுக்காது மற்ற நேரங்களில் வியாபாரம் செய்து பழகியவர் சீசனிலும் வியாபாரம் செய்தால் அதிக பலனைப் பெறலாம். அதேபோல ரமழான் அல்லாத நேரங்களிலும் வணங்கியவர், ரமழானிலும் வணங்கினால் அதிக நன்மைகளைப் பெறலாமே தவிர, ரமழானில் மட்டும் அதிகம் வணங்கி, ரமழான் முடிந்தவுடன் பள்ளியின் பக்கம் எட்டிப் பார்க்காதவர் நன்மைகளைப் பெற முடியாது
ஒரு முதலாளியாக நாம் இருந்து கற்பனை செய்து பார்க்கிறோம் - நம்மிடம் ஒரு தொழிலாளி வேலை செய்கிறான் மாதத்தில் எல்லா வேலை நாட்களிலும் தொடர்ச்சியாக வர வேண்டும் என்று நாம் கட்டளையிட்டிருக்கும் நிலையில், ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் அவன் வரா விட்டால் பொறுத்துக் கொள்வோம். ஆனால் அவன் வருவதே மாதத்தில் மூன்று நாட்கள் தான். அல்லது வாரத்தில் ஒரு நாள் தான் என்றால் நாம் அவனை என்ன செய்வோம். அவனை மிரட்டுவோம் வாரத்தில் ஒரு நாள் வந்து கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்வதற்கு நீ என்ன பெரிய அதிகாரியா ? ஒழுங்காக வேலைக்கு வரா விட்டால் நீ நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்வோம் அல்லவா? சம்பளம் மட்டுமே கொடுக்கும் நமக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கும்போது நம்மைப் படைத்துப் பரிபாலிப்பவனுடைய கட்டளை தினமும் ஐந்து வேளை என்றிருக்க, POINT to POINT மாதிரி ஜும்ஆ to ஜும்ஆ என்ற நிலையை அல்லாஹ் பொறுத்துக் கொள்வானா?
வாழ்க்கையில் சிரமம் ஏற்படும்போது மட்டும் தொழும் சந்தர்ப்பவாதிகளைப் பற்றி....
சில முஸ்லிம்கள் இப்படியும் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் அல்லது ஏதேனும் தேவை நிறைவறவிருந்தால் மட்டும் தொழுவார்கள் அந்த தேவை நிறைவேறி விட்டால் அல்லது அந்த துன்பம் நீங்கி விட்டால் தொழுகையை மறந்து விடுவார்கள்
ஆழ்கடல் இருளில் தன் சோதனையை நீக்கும்படி இருவர் துஆ செய்தனர். அதில் ஒருவரின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். ஏனெனில் அவர் சிரமத்தின் போது மட்டும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர் அல்ல. எப்போதும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர். அதனால் அவரது சிரமத்தை அல்லாஹ் நீக்கினான். அவர் தான் நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்
وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ (87الانبياء)
இன்னொருவன் ஃபிர்அவ்ன் -அவனும் செங்கடலில் மூழ்கடிக்கப்படும் இறுதி நேரத்தில் தான் அல்லாஹ்வை ஏற்று அல்லாஹ்விடம் தம்மை காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்தான் ஆனால் அவனது ஈமானும் ஏற்கப்படவில்லை அவன் காப்பாற்றப்படவுமில்லை. ஏனெனில் அவன் தனக்குக் கஷ்டம் வரும்போது மட்டுமே அல்லாஹ்வை அழைத்தான். அதேபோல சில முஸ்லிம்கள் சிரமமான நேரங்களில் மட்டும் அல்லாஹ்வைத் தொழுது சந்தோஷமான நேரங்களில் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். இவர்களை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான்
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ- آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91يونس)عَنِ ابْنِ عَبَّاسٍ رض إِنَّ جِبْرِيلَ كَانَ يَدُسُّ فِي فَمِ فِرْعَوْنَ الطِّينَ مَخَافَةَ أَنْ يَقُولَ : لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ.(مسند أحمد, تفسير ابن كثير)
கடைசி நேரத்தில் துன்பத்தின் போது ஃபிர்அவ்ன் கேட்கும் பிரார்த்தனை ஒருவேளை ஏற்கப்பட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாக அவன் பிரார்த்தனையை முழுமையாக்க விடாமல் அவனுடைய வாயில் ஜிப்ரயீல் அலை மண்ணைப் போட்டு திணித்தார்கள்
எந்த அமலையும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதால் தான் சக்திக்கு மீறிய அமலை இஸ்லாம் விரும்பவில்லை
عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ كَانَتْ عِنْدِي امْرَأَةٌ فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَنْ هَذِهِ قُلْتُ فُلَانَةُ لَا تَنَامُ تَذْكُرُ مِنْ صَلَاتِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لَا يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا قَالَتْ وَكَانَ أَحَبَّ الدِّينَ إِلَيْهِ الَّذِي يَدُومُ عَلَيْهِ صَاحِبُهُ (ابن ماجة)
عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِذَا نَعَسَ4 أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ فَإِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى وَهُوَ يَنْعَسُ لَعَلَّهُ يَسْتَغْفِرُ فَيَسُبُّ نَفْسَهُ (بخاري) عَنْ أَبي هُرَيْرَةَ رضي الله عنها عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ أَحَدُكُمْ مِنْ اللَّيْلِ فَاسْتَعْجَمَ الْقُرْآنُ عَلَى لِسَانِهِ فَلَمْ يَدْرِ مَا يَقُولُ فَلْيَضْطَجِعْ(مسلم)
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ ، فَقَالَ : مَا هَذَا الْحَبْلُ ، قَالُوا : هَذَا حَبْلُ زَيْنَبَ ، فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لا, حُلُّوهُ ، فَلْيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ (شرح السنة)
قَالَ النَّوَوِيّ : بِدَوَامِ الْقَلِيل تَسْتَمِرّ الطَّاعَة بِالذِّكْرِ وَالْمُرَاقَبَة وَالْإِخْلَاص وَالْإِقْبَال عَلَى اللَّه بِخِلَافِ الْكَثِير الشَّاقّ حَتَّى يَنْمُو الْقَلِيل الدَّائِم بِحَيْثُ يَزِيد عَلَى الْكَثِير الْمُنْقَطِع أَضْعَافًا كَثِيرَة-شرح مسلم للامام النووي)وَقَالَ اِبْن الْجَوْزِيّ : إِنَّمَا أَحَبَّ الدَّائِم لِمَعْنَيَيْنِ : أَحَدهمَا أَنَّ التَّارِك لِلْعَمَلِ بَعْد الدُّخُول فِيهِ كَالْمُعْرِضِ بَعْد الْوَصْل ، فَهُوَ مُتَعَرِّض لِلذَّمِّ ، وَلِهَذَا وَرَدَ الْوَعِيد فِي حَقّ مَنْ حَفِظَ آيَة ثُمَّ نَسِيَهَا وَإِنْ كَانَ قَبْل حِفْظهَا لَا يَتَعَيَّن عَلَيْهِ .ثَانِيهمَا أَنَّ مُدَاوِم الْخَيْر مُلَازِم لِلْخِدْمَةِ ، وَلَيْسَ مَنْ لَازَمَ الْبَاب فِي كُلّ يَوْم وَقْتًا مَا كَمَنْ لَازَمَ يَوْمًا كَامِلًا ثُمَّ اِنْقَطَعَ(فتح الباري
No comments:
Post a Comment