Friday, March 7, 2025

எட்டாவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم

எட்டாவது தராவீஹ்

எதிர்ப்புகளில் தான் இஸ்லாம் மேலும் வலுவடையும்

يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ (32) الانفال

எங்கு இஸ்லாத்திற்கு எதிரான அவதூறுகளும், பொய்ப் பிரச்சாரங்களும் அளவுக்கதிகமாக செய்யப்படுகின்றதோ அங்கு இஸ்லாம் காட்டுத் தீ போல் பரவும் என்பது தான் வரலாறு.. இதைத் தான் அல்லாஹ் மேற்படி வசனத்தில் கூறும்போது இஸ்லாம் என்ற ஜோதியை தங்களுடைய வாயால் ஊதி அனைத்து விட எதிரிகள் எண்ணுகிறார்கள். ஆனால் அல்லாஹ் அதைப் பரிபூரணப் படுத்தவே விரும்புகிறான் என்று கூறியுள்ளான். ஒவ்வொரு கால கட்டத்திலும் எதிரிகள் இஸ்லாத்தை அழிக்க நினைக்கும்போது அது மேலும் வலுவாக மாறிய வரலாறுகள் தான் அதிகம் நடைபெற்றுள்ளன.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் ஒழித்துக்கட்டி, அவரது சத்தியக் கொள்கையையும் ஒழித்துக் கட்ட அத்தனை சூனியக்காரர்களையும் ஃபிர்அவ்ன் அழைத்தான். ஆனால் அந்த சூனியக்காரர்கள் அனைவரும் முஃமின்களாக மாறினர்

فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ (38) وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنْتُمْ مُجْتَمِعُونَ (39) لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ إِنْ كَانُوا هُمُ الْغَالِبِينَ (40) فَلَمَّا جَاءَ السَّحَرَةُ قَالُوا لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِنْ كُنَّا نَحْنُ الْغَالِبِينَ (41) قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَمِنَ الْمُقَرَّبِينَ (42) قَالَ لَهُمْ مُوسَى أَلْقُوا مَا أَنْتُمْ مُلْقُونَ (43) فَأَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ الْغَالِبُونَ (44) فَأَلْقَى مُوسَى عَصَاهُ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ (45) فَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ (46) قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ (47) رَبِّ مُوسَى وَهَارُونَ (48) قَالَ آمَنْتُمْ لَهُ قَبْلَ أَنْ آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ- لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ (49) قَالُوا لَا ضَيْرَ إِنَّا إِلَى رَبِّنَا مُنْقَلِبُونَ (50) إِنَّا نَطْمَعُ أَنْ يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَايَانَا أَنْ كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ (الشعراء51)

وَقَدْ جَمَعُوهُمْ مِنْ أَقَالِيم بِلَاد مِصْر وَكَانُوا إِذْ ذَاكَ أَسْحَر النَّاس وَكَانَ السَّحَرَة جَمْعًا كَثِيرًا وَجَمًّا غَفِيرًا قِيلَ كَانُوا اِثْنَيْ عَشَرَ أَلْفًا وَقِيلَ خَمْسَةَ عَشَرَ أَلْفًا وَقِيلَ سَبْعَةَ عَشَرَ أَلْفًا وَقِيلَ تِسْعَةَ عَشَرَ أَلْفًا وَقِيلَ بِضْعَة وَثَلَاثِينَ أَلْفًا وَقِيلَ ثَمَانِينَ أَلْفًا وَقِيلَ غَيْر ذَلِكَ وَاَللَّه أَعْلَم بِعِدَّتِهِمْ

நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சூனியக்காரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் எண்ணிகை குறித்து 12,000 என்றும் 5,000 என்றும் 7,000 என்றும் 9,000 என்றும் 30,000 என்றும் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன.

ஒரு முஸ்லிமை ஒழிக்க நினைத்தால் அதற்கு மாற்றாக ஓராயிரம் முஸ்லிம்கள் உருவான மற்றொரு சம்பவம்

   சம்பவம்-2 ஒரு அரசனிடம் சூனியக்காரனாக மாற வேண்டியதிருந்த இளைஞரின் பாதையை அல்லாஹ் மாற்றி நேர்வழியில் செலுத்திய சம்பவம் சுருக்கமாக- இறுதியில் அந்த இளைஞரைக் கொல்வதற்கு அரசன் பல தடவை முயன்றும் தோற்றுப்போய் விட, கடைசியாக அந்த இளைஞரே அரசனிடம் நான் சொல்லும் விதத்தில் செயல்பட்டால் தான் என்னைக் கொல்ல முடியும் என்று கூறி ஊர் மக்களையெல்லாம் திரட்டச் சொல்லுவார் ஊர் ஒன்று கூடியிருக்க, தன்னையே கடவுள் என்று பிதற்றிய அந்த அரசன் தனக்குப் பிடிக்காத அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அம்பை எறியும் போது தான் அந்த இளைஞர் கொல்லப்படுவார் அதைக் கண்டு அந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் முஸ்லிமாகி விடுவர். அந்த அரசன் தன் மனதில் உயிருடன் இருந்த ஒரேயொரு முஸ்லிமையும் நாம் கொன்று விட்டோம் இனி முஸ்லிமே இந்த ஊருக்குள் இருக்க மாட்டார்கள் என்று பெருமிதம் கொள்ளும் நேரத்திற்குள் அங்கே பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் உருவாகி விடுவார்கள் இச்சம்பவத்தை விரிவாக முஸ்லிம் ஷரீஃபில் 5735 காணலாம் சூரத்துல் புரூஜ் உடைய ஆரம்ப வசனங்கள் 4 முதல் 9 வரை இச்சம்பவத்தின் சுருக்கமாகும்

   அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமிய வளர்ச்சி

   2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு பிரச்சாரங்களின் விளைவாக ஒரு மாபெரும் சிந்தனைப்புரட்சி அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டது. அதற்குப்பிறகுதான் அவர்கள் இஸ்லாத்தை நோக்கி திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர். இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு தான் திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் மற்றும் இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அளவுக்கதிகமாக அமெரிக்காவில் விற்றுத்தீர்ந்தன. பல்லாயிரக் கணக்கான பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன என்று பிரபல அமெரிக்க செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சி அமெரிக்காவில் எந்த அளவிற்கு உச்சத்தை எட்டியது என்றால் கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் மஸேஜித்களாக மாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் அமெரிக்க கிறித்தவ மக்கள் இஸ்லாத்தை நோக்கி எந்த அளவிற்கு ஈர்க்கப்பட்டுள்ள்னர் என்பதற்கு சான்றாக உள்ளது மேலும், பள்ளிவாசல்களில் தொழுகையின் போது மக்கள் வெள்ளம் நிரம்பி வழிவதால் சாலைகளிலும் முஸ்லிம்கள் தொழும் காட்சிகளை சர்வசாதாரணமாக அங்கு காணலாம்

லண்டனில் வெளியாகும் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பிரபல பத்திரிக்கையில் கடந்த ஆகஸ்ட் 13 அன்று வெளியான செய்தி

LONDON: Muhammad is now the second most popular name for baby boys in Britain, the times of India (2013 August,13,)

கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டனில் அதிகமான குழந்தைகளுக்கு வைக்கப்பட்ட பெயர் முஹம்மத் என்ற பெயராகும்

ஃபிரான்ஸில் இஸ்லாமிய எழுச்சி

சில வருடங்களுக்கு முன் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) என்ற கேலிப் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் நபி ஸல் அவர்களின் உருவப்படம் அடங்கிய கேலிச் சித்திரம் இடம்பெற்றது. இதனையடுத்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை ஏற்பட்டு சார்ளி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதோடு, நகரின் ஆறு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் பத்திரிகை ஆசிரியர் ஊடகவியலாளர்கள் ஐவர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் காரணம் முஸ்லிம்கள் தான் என ஃபிரான்ஸ் மக்கள் கருதும் அளவுக்கு நாடகம் அரங்கேறியது. ஆனால் இந்த வன்முறையை மறைமுகமாக நிகழ்த்தியது யூதர்கள் தான் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து, அது மூடி மறைக்கப்பட்டுள்ளது எனினும் இந்த சம்பவத்தால் ஃப்ரான்ஸில் இஸ்லாம் தனது வீரியத்தை இழக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணினர். ஆனால் நிலைமையோ தலைகீழாக மாறியது. முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் இஸ்லாம் எப்படி அசுர வேகத்தில் பரவியதோ அதே போன்று அப்போது ஃப்ரான்ஸ் முழுவதும் இஸ்லாத்துக்கு ஆதரவான ஒரு சூழல் எற்பட்டது. நபிகள் நாயகம் என்றால் யார் என்றே தெரியாமல் இருந்த பல ஃப்ரான்ஸ் நாட்டு மக்கள் அன்று ஆர்வத்தோடு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை வாங்கிச் சென்றனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு மிக அதிக அளவில் விற்றுத் தீர்ந்தன.

யுவான் கிளாபர்ட் வெஸ்டர்ன் ஃப்ரான்ஸில் புத்தக கடை நடத்தி வருபவர். அவர் கூறுகிறார் 'கத்தோலிக்க பெண் ஒருவர் என்னிடம் வந்து குர்ஆனின் மொழி பெயர்ப்பு கேட்டார். 'நீங்கள் கத்தோலிக்கர் ஆயிற்றே! குர்ஆன் எதற்கு' என்று கேட்டேன். 'குர்ஆன் உண்மையில் வன்முறையைத்தான் போதிக்கிறதா' என்பதை ஆய்வு செய்வதற்காக இதனை வாங்குகிறேன்' என்கிறார்.

முஸ்லிம்களின் மிக வேகமான வளர்ச்சி பற்றி மாலை மலரில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான செய்தி...

   உலக அளவில் மத நம்பிக்கை குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அது குறித்த அறிக்கையை ‘பியூ’ என்ற ஆராய்ச்சிமையம் வெளியிட்டுள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஓரளவே வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்துக்கள் மெஜாரிட்டி ஆக உள்ள நாடு என்ற நிலையை தக்க வைத்து கொள்ளும். அதே நேரத்தில் தற்போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இந்தோனேசியாவை விட இந்தியாவில் அவர்களது மக்கள் தொகை உயரும்.2050-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஓரளவு சம எண்ணிக்கையில் இருப்பார்கள். முஸ்லிம்கள் 280 கோடி அல்லது 30 சதவீதம் ஆகவும், கிறிஸ்தவர்கள் 290 கோடி அல்லது 31 சதவீதம் ஆகவும் உயரும் வாய்ப்பு உள்ளது. அதே வேளையில் கடந்த 2010-ம் ஆண்டில் முஸ்லிம்கள் 160 கோடியாகவும், கிறிஸ்தவர்கள் 217 கோடியாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை நீடித்தால் 2070-ம் ஆண்டில் உலகிலேயே இஸ்லாமிய மதம் மிகவும் பிரசித்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது புத்த மதம் சீனா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே அதிக அளவில் பின்பற்றப்படுகிறது. எனவே அந்த மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை உயரும் வாய்ப்பு இல்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை எதிரிகள் வந்தாலும் இறுதிக்காலம் வரை சத்திய மார்க்கத்தை எடுத்துக் கூற ஒரு கூட்டம் இருந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் மூலம் இந்த மார்க்கம் தலைத்தோங்கும்

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لَنْ يَبْرَحَ هَذَا الدِّينُ قَائِمًا يُقَاتِلُ عَلَيْهِ عِصَابَةٌ مِنَ الْمُسْلِمِينَ حَتَّى تَقُومَ السَّاعَةُ (مسلم) عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ (مسلم) بَاب قَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ-كِتَاب الْإِمَارَةِ

قَالَ الْقَاضِي عِيَاض : إِنَّمَا أَرَادَ أَحْمَد أَهْل السُّنَّة وَالْجَمَاعَة ، وَمَنْ يَعْتَقِد مَذْهَب أَهْل الْحَدِيث ، قُلْت : وَيَحْتَمِل أَنَّ هَذِهِ الطَّائِفَة مُفَرَّقَة بَيْن أَنْوَاع الْمُؤْمِنِينَ مِنْهُمْ شُجْعَان مُقَاتِلُونَ ، وَمِنْهُمْ فُقَهَاء ، وَمِنْهُمْ مُحَدِّثُونَ ، وَمِنْهُمْ زُهَّاد وَآمِرُونَ بِالْمَعْرُوفِ وَنَاهُونَ عَنْ الْمُنْكَر ، وَمِنْهُمْ أَهْل أَنْوَاع أُخْرَى مِنْ الْخَيْر ، وَلَا يَلْزَم أَنْ يَكُونُوا مُجْتَمَعِينَ بَلْ قَدْ يَكُونُونَ مُتَفَرِّقِينَ فِي أَقْطَار الْأَرْض .(فتح الباري)

காழி இயாழ் ரஹ் அவர்கள் மேற்படி ஹதீஸுக்கு விளக்கம் கூறும்போது அந்தக் கூட்டம் என்பது அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் என்பதையே குறிக்கும். அவர்கள் எல்லோரும் ஒரே பகுதியில் இருக்க வேண்டும் என்பது கிடையாது. உலகில் பல்வேறு பகுதியிலும் பரவி இருக்கலாம். மேலும் அவர்களில் மார்க்க அறிஞர்களும் இருக்கலாம். மார்க்க அறிஞர்களாக இல்லாத போராளிகளாகவும் இருக்கலாம். ஹதீஸ் ஆய்வாளர்களாகவும் இருக்கலாம். ஃபிக்ஹ் துறையில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்கலாம். நன்மையை ஏவி தீமையைத் தடுப்பவர்களாகவும் இருக்கலாம் என்று விளக்கம் கூறியுள்ளார்கள்.

மன்னர் அக்பரின் காலத்தில் இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகள் முறியக்கப்பட்ட விதம்

  அக்பரின் காலத்தில் அக்பரின் ஆதரவுடன் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை முற்றிலும் அகற்றி விட்டு ஹிந்து மத சட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்று பகிரங்கமாக அறிக்கை விடுமளவு நிலைமை மோசமானது. முஸ்லிம்கள் எவரும் இஸ்லாமிய நடை, உடையை கடைப்பிடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படுமளவுக்கு நிலைமை இருந்தது. ஷரீஅத்தின் கடமைகளான தொழுகை. நோன்பு.ஹஜ்ஜீ. பர்தா பேனுவது தக்வா, பரிசுத்தம் போன்றவை கேலிக்கூத்தாகவும் ஆயின. இவ்வாறு ஹலால். ஹராமாகவும் ஹராம். ஹலாலாகவும் உருமாற்றம் பெற்றது. இந்திய முஸ்லிம்களின் கொள்கையின் நிலை இதுவென்றால் ஒழுக்க நிலையோ இதைவிட மோசமாக இருந்தது. கொலை, கொள்ளை, குடி, விபச்சாரம், போதை எதற்கும் பஞ்சமில்லை. குடும்ப, சமுதாய எந்த நிகழ்ச்சியும் தரங்கெட்ட பெண்களின் நடனக் கூத்துகளின்றி நடைபெறாது மார்க்க நிகழ்ச்சி என்ற பெயரில் நடைபெறும் மேடைகளில் கூட இப்பெண்கள் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். இத்தீமைகள் அனைத்து தரப்பு மக்களிடமும் காணப்பட்டன. (தர்யாயே லதாஃபத்- ஆசிரியர் ஷைய்யிது இன்ஷா. நூல் வெளியீட்டாண்டு.ஹிஜ்ரீ- 1223)

    அக்பர் தீனே இலாஹி (கடவுளின் மதம்) என்று ஒரு புதிய மதத்தை உருவாக்கி இந்து மதத்தின் முக்கிய அம்சங்களை இஸ்லாத்துடன் கலந்து ஒரு கலப்பு மதமாக அதை அறிவித்தார். இருப்பினும் இந்து மதத்திலேயே அவருடைய நம்பிக்கை இருந்தது. இஸ்லாத்தை வெறுத்தார். விஷேச தினங்களில் யாகங்களும் சிறப்பு பூஜைகளும் நடத்தி கோவில்களுக்குச் சென்று வந்தார். தாடியை எடுத்து மீசையை வளர்க்கும் பழக்கத்தைக் கொண்டு வந்தார். சாட்சிகள் இல்லாத திருமணங்களுக்கு சட்ட அனுமதி வழங்கினார். பாடத்திட்டத்தில் ஜோதிடம், வேதாந்தம் ஆகியவற்றைத் திணித்தார். இவற்றை எதிர்ப்பவர்களை நாடு கடத்தினார். சிறைத் தண்டனை அளித்தார். சுருங்கக் கூறின் இஸ்லாத்தை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே மூட்டை கட்டி அனுப்ப முயன்றார். முஸ்லிம்கள் எவரும் இஸ்லாமிய நடை, உடையை கடைப்பிடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஷரீஅத்தின் கடமைகளான தொழுகை. நோன்பு.ஹஜ்ஜீ. பர்தா பேனுவது தக்வா, பரிசுத்தம் போன்றவை கேலிக்கூத்தாகவும் ஆயின.

மீண்டும் இஸ்லாமிய எழுச்சி எவ்வாறு ஏற்பட்டது

   ஒரு மாபெரும் வல்லரசால் உருவாக்கப்பட்ட அந்த பொய் மதத்தை முறியடிக்கும் புரட்சிக்கு வித்திட்டவர் முஜத்தித் அல்ஃபஸானி என அன்பாக அழைக்கப்படும் மகான் ஷைக் அஹ்மது ஸர்ஹந்தீ (ரஹ்)அவர்களாவார்கள். ஆலிம்கள், நவாப்கள், அமைச்சர்கள், சூஃபிகள் ஆகியோருடன் கடிதத் தொடர்பு கொண்டு அக்பருடைய பொய் மதத்தின் ஆபத்துக்களை எடுத்துக்காட்டி சீரான கொள்கைகளை விளக்கினார்கள்.

அக்பர் மறைந்த பிறகு ஜஹாங்கீர் தம்முடைய ஷியா மனைவியான நூர்ஜஹானின் தூண்டுதலால் முஜத்தித் அவர்களைக் கைது செய்து குவாலியர் சிறையிலடைத்தார். சிறையில் அன்னார் மேற்கொண்ட அழைப்புப் பணியால் ஆயிரக்கணக்கான கைதிகள் இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறினார். பின்னர் ஜஹாங்கீர் மனம் திருந்தி அன்னாரை விடுதலை செய்ததுடன் கௌரவிக்கவும் செய்தார். தவ்பா செய்து மீண்டார். ஆலோசனைகள் கேட்டுப் பெற ஆரம்பித்தார். எளிய குடும்பத்தில் பிறந்து தனி நபராக இருந்து கொண்டு முகலாய சாம்ராஜ்யத்தையே எதிர்த்து செய்த புரட்சிக்கு அல்லாஹ்வின் ஆதரவும் உதவியும் கிடைத்தது இந்தப் போராட்டம் மட்டும் அன்று நடைபெறாமல் போயிருக்குமானால் இந்தியாவில் இன்று இஸ்லாத்தைப் பார்ப்பதே அரிதாயிருக்கும். இந்தியாவில் இஸ்லாம் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் செயல்பட்டு வருவதில் முஜத்தித் அல்ஃபதானி அவர்களுக்கு சிறப்பான பங்குண்டு என ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

(ஆதார நூல்: முஜத்தித்தே அல்ஃ பஸானியின் கடிதத் தொகுப்பு

No comments:

Post a Comment

இருபத்தேழாவது தராவீஹ்

 28-03-2025 RAMZAN – 27 بسم الله الرحمن الرحيم   27 வது இரவு பயான்  https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES ...