Sunday, March 9, 2025

பத்தாவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم  

10- வது தராவீஹ்

பத்தாவது தராவீஹ்

யூசுஃப் சூராவின்   சில படிப்பினைகள்

قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُنْ مِنَ الْجَاهِلِينَ (33)

   இறைவா அவர்கள் எதன் பால் என்னை அழைக்கிறார்களோ அதைவிட சிறையே எனக்கு மிகவும் மேலானது. அவர்களுடைய திட்டத்திலிருந்து நீ என்னைத் தடுக்கா விட்டால் நான் அவர்களின் பக்கம் சாய்ந்து விடுவேன். அறியாதவர்களில் ஒருவனாக நான் ஆகி விடுவேன் என்று துஆச் செய்தார்கள். அதன்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதன் மூலம் நமக்கு படிப்பினை என்னவெனில் தவறான விஷயத்தில் ஈடுபடும் சூழ்நிலையை விட சிறையில் இருப்பதே மேல் என்ற ஒரு கொள்கை யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இறையச்சத்தை உணர்த்துகின்றது 

பொறாமை கொள்ள வேண்டாம்

    பொறாமை என்ற கெட்ட குணம் சமூகங்களை பிளவுபடுத்துகிறது. யஃகூப் அலைஹிஸ்ஸலாம் தன் மகன் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மகனே உன்னுடைய கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே அவ்வாறு கூறினால் அவர்கள் உனக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கிறான் என்று கூறினார்கள். நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடன்பிறந்த சகோதரர்கள் பொறாமையின் காரணமாக நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள். காரணம் தங்களுடைய தந்தை தங்களை விட யூசுபை அதிகம் நேசிப்பதாகக் கருதினார்கள். அதனால் அவர்களின் உள்ளத்தில் பொறாமை ஏற்பட்டு அந்த சகோதரர்கள் பகுத்தறிவற்ற கும்பலாக மாறி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கிணற்றில் போட்டார்கள்.அந்த சதியை மறைப்பதற்காக யூசுப் அலைஹிஸ் ஸலாம் அவர்களை ஓநாய் தின்று விட்டதாக தங்களின் தந்தையிடம் தெரிவித்தார்கள். இதன் மூலம் நமக்குப் படிப்பினை என்னவென்றால் என்ன தான் உறவினர்களாக இருந்தாலும் பொறாமை என்கிற ஒரு விஷயம் வந்து விட்டால் அது உடன் பிறந்த சகோதரர்களைக் கூட விட்டு வைக்காது. உடன் பிறந்த சகோதரர்கள் விஷயத்தில் கூட பொறாமை என்பது தன் வேலையைக் காட்டி விடும். ஹாபீல், காபீல் உடைய விஷயத்திலும் இந்தப் பொறாமை தான் கொலை செய்யும் அளவுக்குக் கொண்டு சென்றது. எனவே நாம் நம்முடைய மனதில் எப்படி உறுதி கொள்ள வேண்டும் என்று சொன்னால் நம்மை விட மற்றவர்கள் அல்லாஹ்வினால் அருள் செய்யப்பட்டவர்களாக ஆகும் போது அது போன்று நாமும் ஆகுவதற்கு துஆச் செய்ய வேண்டுமே தவிர அவர்கள் மீது பொறாமைப் படக்கூடாது. மாறாக அவர்களைக் கண்டு மனப்பூர்வமாக மகிழ்ச்சி அடைய வேண்டும் பொறாமை என்கிற ஒரு கெட்ட எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் அது மிக மோசமான விளைவை ஏற்படுத்தும். 

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை 

   நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மகன் கண்டிப்பாக கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையை ஒருபோதும் கைவிடவில்லை. எகிப்துக்குச் சென்ற தமது மகன்கள் திரும்பி வந்து தங்களுடைய இன்னொரு சகோதரரும் அரசவையில் பிடிக்கப் பட்டதாக சொல்லும்போது தந்தையின் மனதில் துக்கம் அதிகமாகி பார்வையற்றவராக ஆகி, பல சோதனைகள் ஏற்பட்ட போதும் நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் சொன்ன வார்த்தை குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதாவது தனது மகன் யூசுபும் புன்யா மீனும் நிச்சயம் கிடைப்பார்கள் என்ற அர்த்தத்தில் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள்.

وَلَا تَيْئَسُوا مِنْ رَوْحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْئَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ (87)

 இதன் மூலம் நமக்கு படிப்பினை என்னவென்றால் நீண்ட காலமாக தன் மகனைப் பார்க்கவில்லை. பல ஆண்டுகள் கடந்து விட்டன. அப்படி இருந்தும் தன் மகனார் கிடைப்பார் என்ற நம்பிக்கையை அவர்கள் இழக்கவில்லை. உறுதியாக துஆச் செய்து கொண்டே இருந்தார்கள்.

 அந்த நம்பிக்கையை அல்லாஹ் வீணாக்காமல் இறுதியிலே அந்த துஆவின் பிரதிபலனை அல்லாஹ் தந்தான். நாமும் அது போன்று ஒரு துன்பம் நீங்குவதற்காக துஆ செய்தால் பொறுமையாக இருக்க வேண்டும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிர்அவ்னுக்கு எதிராக துஆச் செய்து 40 வருடங்கள் கழித்து அல்லாஹ் பிர்அவ்னை அழித்தான். 

பொறுமைக்கு மேல் பொறுமை

  நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எத்தனைமுறை பொறுமையாக இருந்தார்கள் என்பதைக் கணக்கிடவே முடியாது. தாம் கண்ட கனவு நிறைவேறும் வரை பொறுமையாக இருந்தார்கள். சகோதரர்கள் தம்மைக் கிணற்றில் போட்ட போது பொறுமையாக இருந்தார்கள். அடிமையாக விற்கப்பட்ட போது பொறுமையாக இருந்தார்கள். செய்யாத தவறுக்காக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அவர்கள் இருந்த போது பொறுமையாக இருந்தார்கள். ஆகவே இந்த பொறுமையின் விளைவாகவே அல்லாஹ் அவர்களுக்கு மாபெரும் பதவியை வழங்கினான். 

பழி வாங்காத நல்ல குணம்

 யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சகோதரர்களைக் கண்டபோது அவர்கள் இக்கட்டான நிலையில் இருந்தார்கள். யூசுப் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நினைத்திருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி இருக்க முடியும் உங்களுக்கு உணவு தானியங்கள் கிடையாது என்று அனுப்பி இருக்க முடியும். ஆனால் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனக்கு துரோகம் செய்த அந்த சகோதரர்களுக்கு உணவு தானியங்களை நிரம்பக் கொடுத்து அனுப்பியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கொடுத்த பணத்தைக்கூட அவர்களின் பையிலே வைத்து விட்டார்கள். எனவே நமக்குத் தீங்கு செய்தவர்களை மன்னிக்கும் குணம் இதன் மூலம் நமக்கு வர வேண்டும். ஆனால் தனது சகோதரர்களை அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அல்லாஹ்வின் வஹீ அடிப்படையில் தான் அவர்கள் அங்குமிங்கும் அலைய விட்டார்கள். இறுதியில் அவர்களை மன்னித்தார்கள். 

தன்னால் இயன்ற வரை மாற்றாரிடம் அழைப்புப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்

கனவுக்கு விளக்கம் கேட்ட இருவரிடம் அதற்கான விளக்கத்தை நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் கூறும் முன்பு அவர்களிடம் தொடங்கியது அழைப்புப்பணியைத் தான்

وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ قَالَ أَحَدُهُمَا إِنِّي أَرَانِي أَعْصِرُ خَمْرًا وَقَالَ الْآخَرُ إِنِّي أَرَانِي أَحْمِلُ فَوْقَ رَأْسِي خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ نَبِّئْنَا بِتَأْوِيلِهِ إِنَّا نَرَاكَ مِنَ الْمُحْسِنِينَ (36) قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِ قَبْلَ أَنْ يَأْتِيَكُمَا ذَلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي إِنِّي تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ (37) وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَنْ نُشْرِكَ بِاللَّهِ مِنْ شَيْءٍ ذَلِكَ مِنْ فَضْلِ اللَّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُونَ (38) يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ (39) مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (40) يوسف

வாழ்க்கையில் ஒருவரையேனும் இஸ்லாத்தின் பால் கொண்டு வருவது மிகச் சிறந்த பாக்கியம்

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ (النحل125)عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ خَيْبَرَ لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى فَقَالَ أَيْنَ عَلِيٌّ فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ فَأَمَرَ فَدُعِيَ لَهُ فَبَصَقَ فِي عَيْنَيْهِ فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّه لَمْ يَكُنْ بِهِ شَيْءٌ فَقَالَ نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ فَوَاللَّهِ لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ (بخاري)

பொருள்- கைபர் போரின் போது) நபி (ஸல்) அவர்கள், நாளை (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஒருவரிடம் தரப் போகிறேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான் என்றார்கள். ஆகவே, மக்கள் தம்மில் எவரிடம் அது தரப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். காலையில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசையில் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், அலீ பின் அபீதாலிப் எங்கே? என்று கேட்டார்கள். மக்கள், அவருக்குக் கண்வலி என்று சொன்னார்கள்.உடனே நபி(ஸல்) அவர்கள்,அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) வந்தவுடன் அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காக பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப்போன்று அவர்கள் (வலி நீங்கி) குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் தூதரே!அவர்கள் நம்மைப்போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அவர் களுடைய களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு (வரும்படி) அழையுங்கள். மேலும், இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமை யாகின்ற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியை அளிப்பது (அரபுகளின் அருஞ் செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.                  

கண் திருஷ்டி ஏற்படக்கூடாது என்பதற்காக ஒரே வாசலில் நுழையக்கூடாது என யஃகூப் அலை அறிவுறுத்தினார்கள்

وَقَالَ يَا بَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ وَمَا أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ (67)يوسف قَالَ اِبْن عَبَّاس وَمُحَمَّد بْن كَعْب وَمُجَاهِد وَالضَّحَّاك وَقَتَادَة وَالسُّدِّيّ وَغَيْر وَاحِد إِنَّهُ خَشِيَ عَلَيْهِمْ الْعَيْن وَذَلِكَ أَنَّهُمْ كَانُوا ذَوِي جَمَال وَهَيْئَة حَسَنَة وَمَنْظَر وَبَهَاء فَخَشِيَ عَلَيْهِمْ أَنْ يُصِيبهُمْ النَّاس بِعُيُونِهِمْ فَإِنَّ الْعَيْن حَقّ تَسْتَنْزِل الْفَارِس عَنْ فَرَسه (تفسير ابن كثير

கண் திருஷ்டி உண்மை தான். ஆனால் அல்லாஹ் நாடியபடியே நடக்கும்

عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ مَرَّ عَامِرُ بْنُ رَبِيعَةَ بِسَهْلِ بْنِ حُنَيْفٍ وَهُوَ يَغْتَسِلُ فَقَالَ لَمْ أَرَ كَالْيَوْمِ وَلَا جِلْدَ مُخَبَّأَةٍ فَمَا لَبِثَ أَنْ لُبِطَ بِهِ فَأُتِيَ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ لَهُ أَدْرِكْ سَهْلًا صَرِيعًا قَالَ مَنْ تَتَّهِمُونَ بِهِ قَالُوا عَامِرَ بْنَ رَبِيعَةَ قَالَ عَلَامَ يَقْتُلُ أَحَدُكُمْ أَخَاهُ إِذَا رَأَى أَحَدُكُمْ مِنْ أَخِيهِ مَا يُعْجِبُهُ فَلْيَدْعُ لَهُ بِالْبَرَكَةِ ثُمَّ دَعَا بِمَاءٍ فَأَمَرَ عَامِرًا أَنْ يَتَوَضَّأَ فَيَغْسِلْ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ وَرُكْبَتَيْهِ وَدَاخِلَةَ إِزَارِهِ وَأَمَرَهُ أَنْ يَصُبَّ عَلَيْهِ (ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - قَالَ سُفْيَانُ قَالَ مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ وَأَمَرَهُ أَنْ يَكْفَأَ الْإِنَاءَ مِنْ خَلْفِهِ-(ابن ماجة) بَاب الْعَيْنُ - كِتَاب الطِّبِّ - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعَيْنُ حَقٌّ (بخاري) باب الْعَيْنُ حَقٌّ -كتاب الطب

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் ரழி அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது ஆமிர் ரழி அவர்கள் அந்த வழியாகச் சென்றார். ஸஹ்ல் ரழி அவர்களின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்தவுடன் இது மாதிரி அழகிய உடம்பை வேறு எங்கும் கண்டதில்லை என கண் வைத்து விட்டார். அது அவரை உடனே பாதித்தது. படுத்த படுக்கையாக ஆகி விட்ட அவரை நபி ஸல் அவர்களிடம் அழைத்து வரப்பட்ட போது இவர் விஷயத்தில் யாரையும் சந்தேகிக்கிறீர்களா என்று நபி ஸல் கேட்க, ஆமிரை ரழி நாங்கள் சந்தேகிக்கிறோம் என தோழர்கள் பதில் கூறினார்கள். உடனே ஆமிர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் எதற்காக உங்களின் உடன் பிறவா சகோத ர ரை இப்படி கண்திருஷ்டியை ஏற்படுத்தி ஏன் கொலை செய்கிறீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தினால் பாரகல்லாஹ் என்று கூறலாமே என்றார்கள். பிறகு ஆமிர் ரழி அவர்களிடம் தண்ணீரை எடுத்து வரச் சொல்லி ஆமிர் ரழி உடைய உடல் முழுவதையும் கழுவச் சொல்லி அந்த நீரை ஸஹ்ல் ரழி அவர்களின் மீது ஊற்றச் சொன்னார்கள். (அவ்வாறு ஊற்றப்பட்டது. அவர் குணமடைந்தார்.)                 

ஆரம்பத்தில் இந்த மாதிரி பரிகாரம். பின்பு முஅவ்விததைன் சூராக்கள் இறங்கிய பின்பு அதுவே பரிகாரமாக அமைந்தது

சேமித்து வைப்பது தவறல்ல

“அத்தியாவசியத் தேவை போக மீதமுள்ள உணவுப் பொருட்களை பழுதடையாது சேமிக்க வேண்டும்”.

நபி யூஸுப் அலை அவர்கள் தேவை போக உள்ள பயிர்களை அதன் கதிர்களுடன் சேமித்து வைத்தார்கள். அதே நேரத்தில் தேவையுடைய உறவினர்களையும் அண்டை வீட்டாரையும் பசியில் போட்டு விட்டு சேமிக்கும் திட்டமாக அது இல்லை என்பதை நாம் விளங்க வேண்டும்.

عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ ضَحَّى مِنْكُمْ فَلَا يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَبَقِيَ فِي بَيْتِهِ مِنْهُ شَيْءٌ فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ الْمَاضِي قَالَ كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا فَإِنَّ ذَلِكَ الْعَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا  (بخاري

 ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்கள் :நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர். (அறுத்ததிலிருந்து) மூன்று நாற்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்’ என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்’ என்று பதிலளித்தார்கள்.ஸஹீஹ் புகாரி : 5569.

عن يزيد مولى سلمة بن الأكوع أن امرأته أم سليم : سألت عائشة عن لحوم الأضاحي فقالت : قدم علي بن أبي طالب من غزوة فدخل على أهله فقربت له لحما من لحوم الأضاحي فأبى أن يأكلة حتى سأل رسول الله صلى الله عليه و سلم فقال النبي صلى الله عليه و سلم : ( كله من ذي الحجة إلى ذي الحجة ) 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا وَنَهَيْتُكُمْ عَنْ لُحُومِ الأَضَاحِىِّ فَوْقَ ثَلاَثٍ فَأَمْسِكُوا مَا بَدَا لَكُمْ

தேவை உள்ளவர்களுக்குத் தராமல் சேமித்து வைப்பதும் நல்லதல்ல

عَنْ جَابِرٍ .....قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...ابْدَأْ بِنَفْسِكَ فَتَصَدَّقْ عَلَيْهَا فَإِنْ فَضَلَ شَيْءٌ فَلِأَهْلِكَ فَإِنْ فَضَلَ عَنْ أَهْلِكَ شَيْءٌ فَلِذِي قَرَابَتِكَ فَإِنْ فَضَلَ عَنْ ذِي قَرَابَتِكَ شَيْءٌ فَهَكَذَا وَهَكَذَا يَقُولُ فَبَيْنَ يَدَيْكَ وَعَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ (مسلم

கருத்து- முதலில் உன்னுடைய தேவைக்காகவும் உன் குடும்பத்தாரின் தைவைக்காகவும் எடுத்து வை.  பிறகு மீதமானால் உறவினர்கள் பின்பு மற்றவர்களுக்குக் கொடு...

عن أَبي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا ابْنَ آدَمَ إِنَّكَ أَنْ تَبْذُلَ الْفَضْلَ خَيْرٌ لَكَ وَأَنْ تُمْسِكَهُ شَرٌّ لَكَ وَلَا تُلَامُ عَلَى كَفَافٍ وَابْدَأْ بِمَنْ تَعُولُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى (مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்கிவைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும். இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

இருபத்தேழாவது தராவீஹ்

 28-03-2025 RAMZAN – 27 بسم الله الرحمن الرحيم   27 வது இரவு பயான்  https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES ...