Monday, March 24, 2025

இருபத்தி நான்காவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم  

 24- வது தராவீஹ் 





பிறர் நலம் பேணுவது

وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (9) الحشر

விளக்கம் – மக்காவில் சொத்து சுகங்கள் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு வந்த முஹாஜிர்களுக்காக தன் வீட்டின் பாதியையும் ஒதுக்கிக் கொடுத்து மற்றும் பல்வேறு வகையில் உதவியாக இருந்த அன்சாரிகளைக் குறித்து இந்த வசனம் பேசுகிறது

பிறர் நலம்  பேணுவது ஹஜ்ஜின் நன்மையை பெற்றுத் தரும்

عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ قَالا : مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً ، وَمَنْ عَادَ مَرِيضًا أَظَلَّهُ اللَّهُ بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ ، لا يَرْفَعُ قَدَمًا إِلا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ ، وَلا يَضَعُ قَدَمًا إِلا حُطَّتْ عَنْهُ سَيِّئَةٌ ، وَرُفِعَ بِهَا دَرَجَةً حَتَّى يَقْعُدَ فِي مَقْعَدِهِ ، فَإِذَا قَعَدَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَلا يَزَالُ كَذَلِكَ إِذَا أَقْبَلَ حَتَّى يَنْتَهِيَ إِلَى مَنْزِلِهِ . لا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ رواه الطبراني في المعجم الكبير

  யார் முஸ்லிமான தன்னுடைய சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவரது தேவையையும் நிறைவேற்றி வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் ரஹ்மத்தில் மூழ்கியவராக இருப்பார். யார் முஸ்லிமான நோய்வாய்ப்பட்ட தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவர் அந்த நோயாளியிடம் அமரும் வரை இச்சிறப்பு இருக்கும். அவர் அந்த நோயாளியிடம் சென்று நலம் விசாரிக்க அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் ரஹ்மத் அவரைச் சூழ்ந்து கொள்ளும். அவர் அங்கிருந்து திரும்பி தன் வீட்டுக்கு வரும் வரை அவரது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது.          

عن علي بن حسين ، قال : خرج الحسن يطوف بالكعبة ، فقام إليه رجل فقال : يا أبا محمد ، اذهب معي في حاجة إلى فلان ، فترك الطواف وذهب معه ، فلما ذهب قام إليه رجل حاسد للرجل الذي ذهب معه ، فقال : يا أبا محمد ، تركْتَ الطواف وذهبتَ معه ؟ قال : فقال له الحسن : وكيف لا أذهب معه ؟ ورسول الله صلى الله عليه وسلم قال :  من ذهب في حاجة لأخيه المسلم فقضيت حاجته كتبت له حجة وعمرة ، وإن لم يقض كتبت له عمرة فقد اكتسبت حجة وعمرة ورجعت إلى طوافي (بيهقي في شعب الايمان

 ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு தவாஃப் செய்து கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் வந்து அபூ முஹம்மத் அவர்களே வாருங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு மனிதரின் முக்கியமான அவசியத்தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியவுடன் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனே தவாஃபை விட்டு விட்டு அவருடன் சென்று விட்டார்கள்.அப்போது அந்த நண்பருக்கு வேண்டாத மற்றொருவர் இதைக் கவனித்து விட்டு ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து அவர் அழைத்தவுடன் நீங்கள் தவாஃபை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டீர்களே இது நியாயமா என்று பொறாமையுடன் கூறினார். அப்போது ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் சென்று அவரது நிறைவேற்றியும் வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக இவர் புறப்பட்டுச் சென்றும் அதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கா விட்டால் புறப்பட்டுச் சென்றதற்காக ஒரு உம்ராவின் நற்கூலி வழங்கப்படுகிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கும்போது நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும். இப்போது நான் ஹஜ், உம்ராவின் நன்மையையும் அடைந்து கொண்டேன். என்னுடைய தவாஃபை விட்டதில் இருந்து திரும்ப ஆரம்பித்து அதன் நன்மையையும் பெற்றுக் கொண்டேன் என்று பதில் கூறினார்கள்.                              

عَن أَنَس بن مالك : أن رسول الله صلى الله عليه وسلم قال : من أغاث ملهوفا كتب الله له ثلاثا وسبعين مغفرة مغفرة واحدة منها فيها صلاح لأمره كله وثنتان وسبعون إلى يوم القيامة ، أو ذخرها له يوم القيامة. (مسند البزار

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

யார் பாதிக்கப் பட்டவருக்கு உதவுவாரோ அல்லாஹ் அவருக்கு 73 மஃபிரத்துகளை வழங்குகிறான். அவற்றில் ஒரு மஃபிரத் மட்டுமே அவருடைய இம்மையின் ஈடேற்றத்திற்குப் போதுமாகும். மூதமுள்ள 72 மஃபிரத் அவருடைய மறுமையின் நலனுக்காக சேமித்து வைக்கப்படும். 

عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ....مَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِه (مسلم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

எவர் தன் உடன் பிறவா சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருப்பாரோ அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் அல்லாஹ் ஈடுபட்டிருப்பான்.                                                                    

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاحُمِهِمْ وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى (مسلم


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதில் உண்மை முஃமின்களுக்கு உதாரணம் ஒரே உடலைப் போன்றாகும். உடலின் ஒருபகுதிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் மற்ற பகுதிகளும் அதில் ஒத்துழைக்கின்றன. விழித்திருப்பது, காய்ச்சல் போன்றவைகள் மூலம் மற்ற உறுப்புக்கள் சிரமத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றன.                                         

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுவது இன்னும் சிறந்தது

  விளக்கம்- நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் எகிப்தின் அரசராக இருந்து திறமையாக செயல்பட்டு செழிப்பான முதல் ஏழு வருடங்களில் முடிந்த வரை  சேமித்து வைத்து அரசாங்கத்தின் பைத்துல் மாலில் பத்திரப் படுத்தினார்கள். அதற்கடுத்த பஞ்சமான ஏழு வருடங்கள் வந்த போது சேமித்து வைத்த அந்த தானியங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவியாக வழங்கினார்கள். அந்தப் பணிகளில் முழுமையாக அவர்கள் ஈடு பட்டதால் தான் குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு  தந்தையைச் சந்திப்பதற்கும் கூட அவர்கள் வர முடியவில்லை.                              

 குடும்பமா பொதுச் சேவையா என்று வரும்போது தனது குடும்பத்தை விட பொதுச் சேவையை நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தேர்ந்தெடுத்துக்  கொண்டார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மேலும் சிரமத்தில் இருப்பவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி முஸ்லிமாக இல்லா விட்டாலும் சரி சாதி, மதம் பாகுபாடு பார்க்காமல் உதவுவது நமது கடமையாகும். 

வாழ்க்கையில் நாம் பிறருக்குச் செய்யும் உதவி, உபகாரம், ஒத்துழைப்பு ஆகியவற்றை இரண்டு விதமாக பிரிக்கலாம். சில உதவிகளை நாம் செய்ய வேண்டும் என்று நாடி அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை நாம் தேடிச் செல்வோம். சில நேரங்களில் நாம் சாதாரணமாக இருக்கும்போது  பிறருக்கு உதவி செய்யும் சூழ்நிலைகளை தானாக அமையும். அவைகளை நாம் தட்டிக் கழிக்கக் கூடாது அவைகளை சந்தர்ப்பமாக கருதி அந்த உதவிகளைச் செய்ய வேண்டும். உதாரணமாக டிக்கெட் முன்பதிவு செய்யுமிடத்தில் ஒருவர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யத் தெரியாமல் தடுமாறுகிறார் அவருக்கு அதை பூர்த்தி செய்து தருவது. ஒருவர் பேனாவை மறந்து வைத்து விட்டு வந்து நம்மிடம் பேனாவைக் கேட்பார். அவருக்கு சிறிது நேரம் பேனா கொடுத்து உதவுவது (மேலும் வண்டியில் இருந்து இறங்க சிரமப் படுபவரை இறக்கி விடுவது. பைக்கில் போகும்போது ஏதாவது ஒரு பொருளைத் தவற விட்டுச் செல்பவருக்கு அதை எடுத்துக் கொடுப்பது இது மாதிரி எதார்த்தமான முறையில் உதவி செய்யும் வாய்ப்புகள் தானாக வந்து அமையும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

சில வகையான சின்னச் சின்ன உதவிகளுக்கு அல்லாஹ் தரும் பெரிய பெரிய நன்மைகள்

عَنْ عَائِشَةَ رضي الله عنها  أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا الشَّيْءُ الَّذِي لَا يَحِلُّ مَنْعُهُ قَالَ الْمَاءُ وَالْمِلْحُ وَالنَّارُ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْمَاءُ قَدْ عَرَفْنَاهُ فَمَا بَالُ الْمِلْحِ وَالنَّارِ قَالَ يَا حُمَيْرَاءُ مَنْ أَعْطَى نَارًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا أَنْضَجَتْ تِلْكَ النَّارُ وَمَنْ أَعْطَى مِلْحًا فَكَأَنَّمَا تَصَدَّقَ بِجَمِيعِ مَا طَيَّبَ ذَلِكَ الْمِلْحُ وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَعْتَقَ رَقَبَةً وَمَنْ سَقَى مُسْلِمًا شَرْبَةً مِنْ مَاءٍ حَيْثُ لَا يُوجَدُ الْمَاءُ فَكَأَنَّمَا أَحْيَاهَا (ابن ماجة)ضعيف- بَاب الْمُسْلِمُونَ شُرَكَاءُ فِي ثَلَاثٍ – كِتَاب الْأَحْكَامِ

அன்னை ஆயிஷா ரழி அவர்கள் கூறுவதாவது நான் நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். நம்மிடமுள்ள சில அற்பமான (விலை மலிவான) பொருட்களில் சிலவற்றை யாரேனும் தாம் சிறிது பயன்படுத்திக் கொள்ள கேட்கும்போது எந்தெந்தப் பொருட்களை நாம் தராமல் மறுக்கக் கூடாது என்று ஏதேனும்  சட்டம் உள்ளதா என்று கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் தண்ணீர், உப்பு, நெருப்பு என பதிலளித்தார்கள். உடனே நான் தண்ணீர் தர மறுக்கக்கூடாது என்பது எனக்கும் புரிகிறது. பிறரை தாகத்தோடு விட்டு விடுவது தவறு. ஆனால் நெருப்பையும், உப்பையும் பிறருக்குத் தருவதற்கு ஏன் மறுக்கக்கூடாது என்ற காரணம் எனக்குப் புரியவில்லையே என்றேன் அதற்கு நபி ஸல் அவர்கள் பற்ற வைப்பதற்காக ஒரு நெருப்புக் கங்கை ஒருவர் தந்தால் அந்த நெருப்பின் மூலம் என்னென்ன சமைக்கப்படுகிறதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். அதேபோல அதேபோல் உப்பை ஒருவர் சிறிதளவு தானமாக கொடுத்தாலும் அந்த உப்பு எந்த உணவுக்கெல்லாம் சுவையைக் கூட்டியதோ அவைகள் அனைத்தையும் தானமாக தந்தவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் ஒரு அடிமையை உரிமையை விட்டவரைப் போலாவார். எவர் தண்ணீர் தட்டுப்பாடுள்ள  நேரத்தில் ஒரு முஸ்லிமுக்கு ஒரு மிடறு தண்ணீர் தருவாரோ அவர் அந்த முஸ்லிமுக்கு உயிர் கொடுத்தவரைப் போலாவார்.

No comments:

Post a Comment

இருபத்தேழாவது தராவீஹ்

 28-03-2025 RAMZAN – 27 بسم الله الرحمن الرحيم   27 வது இரவு பயான்  https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES ...