திருப்பூர் மாவட்டத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் திருப்பூரின் மையப்பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த மஹல்லாவான பெரிய கடைவீதி பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதரஸா அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரியைப் பற்றி எங்களுடைய பேராசிரியர் முஹம்மது அலி ஜின்னாஹ் சிராஜி அவர்கள் தந்த குறிப்புகளின் அடிப்படையில் சில தகவல்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.
ஸிராஜுல் முனீர் என்றால் ஒளி சிந்தும் விளக்கு என்று பொருள். பெயருக்கேற்ப இங்கு பட்டம் பெற்ற மெளலவிகள் அகிலமெங்கும் தீனின் ஒளியைப் பரப்பிவருகின்றனர். கொள்கையின் சிங்கங்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸிராஜிகள் தமிழகமெங்கும் பரவியுள்ளனர்.
அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரியின் துவக்கம்:
அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரி துவங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மெளலானா A. முஹம்மது ஃபாரூக் ஹழ்ரத் பெருந்தகை அவர்கள் பெரிய பள்ளி வாசலின் இமாமாக இருந்தார்கள். அப்போது அவர்களின் மனதில் இப்பள்ளிவாசலில் எப்படியேனும் ஒரு அரபிக்கல்லூரி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் ஆர்வமுள்ள சிலரை வைத்து அவர்களே முதலாம் ஜும்ரா பாடத்தை நடத்தியுள்ளார்கள்.
அவர்களிடம் பயின்றவர்கள்தான் திருப்பூர் அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரியின் கண்ணியமிகு முன்னாள்பேராசிரியர் S.G.அஹ்மதுல்லாஹ் ஹழ்ரத் கிப்லா, திருப்பூரைச் சேர்ந்த மெளலானா முஸ்தஃபா ஹழ்ரத், திருப்பூர் மாவட்ட காஜி மெளலவி இல்யாஸ் ஹழ்ரத் ஆகியோர் ஆவார்கள்.
ஆனாலும் அதற்கடுத்த ஜும்ராக்கள் அங்கு நடைபெறவில்லை. முஹம்மது ஃபாரூக் ஹழ்ரத் அவர்கள் அங்கு இமாமாக நீடிக்க முடியாமல் போனதால் அந்த எண்ணம் தற்காலிமாக தடைபட்டது.
எனினும் அடுத்த சில வருடங்கள் கழித்து அதாவது 1975-ல் முஹம்மது ஃபாரூக் ஹழ்ரத் அவர்களும் வேறு சிலரும் தொடர்ந்து அங்கு மதரஸா நடத்த பொருத்தமான முதல்வரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது கோவையில் வசித்து வந்த M.S. முஹம்மது பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்களை நாடினார்கள்.(அப்போது ஹழ்ரத் அவர்கள் மற்றொரு மதரஸாவில் பேராசிரியராக இருந்த நிலையில் ரமழான் விடுமுறையில் கோவையில் இருந்தார்கள்.)M.S.முஹம்மது பாகவீஹழ்ரத் கிப்லா அவர்கள் சில நிபந்தனைகளுடன் முதல்வர் பொறுப்பேற்று நடத்த சம்மதித்தார்கள். அச்சமயம் மெளலானா A. முஹம்மது ஃபாரூக் ஹழ்ரத் அவர்கள் அந்த மதரஸாவுக்கு அஸ்ஸிராஜுல்முனீர் என்று பெயர் வைக்கலாம் என்று கூற, அதை ஹழ்ரத் அவர்களும் மற்றவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
மதரஸாவின் துவக்க விழா:
அல்லாஹ்வின் கிருபையால் 22-10-1975 ஹிஜ்ரி 1395 ஷவ்வால் பிறை 16அன்று பெங்களூர் ஸபீலுர்ரஷாத் அரபிக்கல்லூரியின் ஸ்தாபகர் சங்கை மிகுந்த அபுஸ்ஸுஊத் ஹழ்ரத் கிப்லா அவர்களின் சீரிய தலைமையில் அஸ்ஸிராஜுல்முனீர் அரபிக்கல்லூரி உதயமானது. (அதன்பின் தொடர்ந்து பல வருடங்கள் அல்லாமா அபுஸ்ஸுஊத் ஹழ்ரத் கிப்லா அவர்கள்தான் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
மதரஸாவின் ஆரம்ப கால நிலை:
1975-ல் மதரஸா துவங்கியபோது மூன்று ஜும்ராக்கள் மட்டும் இருந்தது. 18 மாணவர்கள் இருந்தார்கள். ஆசிரியர்களாக M.S.முஹம்மது பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள், ஏரல் அபுல்ஹஸன் பாகவீ அவர்கள் என இரு ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். அதன்பின் அடுத்தடுத்த வருடங்களில் அடுத்த ஜும்ராக்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1980-ல் ஸிராஜி என்ற ஸனது முதன் முதலாக வழங்கப்பட்டது. 2020 வரை 314 பேர் ஸிராஜி ஸனது பெற்றுள்ளார்கள். 2011-ல் ஹிஃப்ழு பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஹாஃபிழ் ஸனதும் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டம் பெறும் மாணவர்களுக்கு குவியும் பரிசுகள்:
அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா என்றாலே தாய் வீட்டு சீதனங்கள் ஞாபகம் வரும் அளவுக்கு எண்ணற்ற பரிசுகளை மஹல்லாவாசிகள் ஒவ்வொருவரும் பொறுப்பேற்று, பட்டம் பெறும் ஆலிம் பெருமக்களுக்குக் கொண்டு வந்து குவித்து விடுவார்கள்.
முதல்வர் முஹம்மது ஹழ்ரத் கிப்லா அவர்களைப் பற்றி:
அஸ்ஸிராஜுல் முனீர் அரபிக்கல்லூரியின் முதல்வர் முஹம்மது ஹழ்ரத் கிப்லா அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அல்லாஹ் தஆலா சிலருக்கு மட்டும் கண்களாலேயே மாணவர்களை கண்டிக்கும் திறமையை கொடுப்பான். தவறு செய்த மாணவரை ஹழ்ரத் கிப்லாஅவர்கள் பார்க்கும் பார்வையே அந்த மாணவரிடம் பயத்தை உண்டாக்கி திருந்த வைக்கும்.
அல்லாமா ஷப்பீர் அலி ஹழ்ரத் அவர்களுடன் நெருக்கம்:
முஹம்மது ஹழ்ரத் கிப்லா அவர்களுக்கு அல்லாமா ஷப்பீர் அலி ஹழ்ரத் அவர்களுடன் மிக நெருங்கிய நட்பு இருந்தது. ஹழ்ரத் அவர்களின் உற்ற நண்பர் என்றால் அல்லாமா ஷப்பீர் அலி ஹழ்ரத் அவர்களைக் கூறலாம். முஹம்மது பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் வாழ்ந்த காலத்திலும் சரி, அவர்களின் வஃபாத்திற்குப் பிறகும் சரி.. ஹழ்ரத் அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் எதுவும் அல்லாமா ஷப்பீர்அலி ஹழ்ரத் அவர்கள் இல்லாமல் நடைபெறாது.
ஆரம்ப காலத்தில் காயல்பட்டணத்திலுள்ள மதரஸாவில் ஆசிரியர்களாக இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.அப்போதிருந்தே இருவருக்கும் மத்தியில் நெருக்கம் இருந்தது. அல்லாமா ஷப்பீர் அலி ஹழ்ரத் அவர்கள் திருப்பூர் வந்தால் ஹழ்ரத் அவர்களின் அறையில் தான் தங்குவார்கள். ஒருநாள், இரண்டு நாட்கள் வரையிலும் கூட தங்குவார்கள்.
மதரஸாவின் சங்கை மிகு முன்னாள் ஆசிரியர்கள்:
1) மர்ஹூம் M.S.முஹம்மது பாகவீ ஹழ்ரத் கிப்லா ரஹ் முதல்வர்
2) மெளலானா அபுல் ஹஸன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா
3) மர்ஹூம் அல்-ஹாஃபிழ் முஹம்மது அபூபக்கர் தாவூதி ஹழ்ரத் கிப்லா
4) மர்ஹூம் முஹம்மது இஸ்மாயில் உலவீ தேவ்பந்தி ஹழ்ரத் கிப்லா
5) மெளலானா S.G.அஹ்மதுல்லாஹ் பாகவீ ஹழ்ரத் கிப்லா
6) மர்ஹூம் மெளலானா ஆதம் முஹ்யித்தீன் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத்
7) மெளலானா முஹம்மது யூசுஃப் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா
8) மர்ஹூம் முஹம்மது இப்றாஹீம் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா
9) மர்ஹூம் மெளலானா முஹம்மது ஜபருல்லாஹ் பாகவி ஹழ்ரத் கிப்லா
10) மெளலானா அல்-ஹாஃபிழ் அபூபக்கர் சிராஜி ஹழ்ரத் கம்பம்
11) மெளலானா அப்துல் கபூர் ஸயீதி ஹழ்ரத் கிப்லா
12) மெளலானா அல்-ஹாஃபிழ் முஹம்மது அலி ஃபாஜில் பாகவீ ஹழ்ரத்
13) மெளலானா முஹம்மது மீரான் ஃபாஜில் பாகவீ தேவ்பந்தி ஹழ்ரத்
14) மெளலானா முஹம்மது காசிம் சிராஜி ஹழ்ரத் பழனி 2009
15) மெளலானா முஹம்மது இல்யாஸ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத்
16) மெளலானா முஹம்மது அய்யூப் பாகவீ ஹழ்ரத் கோவை
17) மெளலானா அல்-ஹாஃபிழ் ஷர்ஃபுத்தீன் சிராஜி ஹழ்ரத்
தற்போது திருப்பூரைச் சேர்ந்த முஹம்மது அபூபக்கர் சிராஜி ஹழ்ரத் அவர்கள் முதல்வராக இருக்கிறார்கள். அவர்களின் தலைமையில் ஏழு ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்.
1) மெளலானா அப்துல் முஜீப் பாகவி
2) மெளலானா சல்மான் பாரிஸ் பாகவி
3) மெளலானா நூருத்தீன் பஹ்து பாகவி
4) மெளலானா முஹம்மது இஸ்ஹாக் பாகவி
5) மெளலானா பஷீர் மஹ்ளரீ
6) மெளாலானா ஸிமால் அஹ்மது பாகவி
7) மெளலானா ரசூல் முஹம்மது தாவூதி (ஹிப்ளு உஸ்தாத்)
55 மாணவர்களைக் கொண்டு அஸ்ஸிராஜுல் முனீர் அரபி மதரஸா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அல்லாஹ் இம்மதரஸாவை கியாமத் வரை நீடிக்கச் செய்வானாக!!
No comments:
Post a Comment