02-03-2025
بسم الله الرحمن الرحيم
ஃபாத்திஹா சூராவின் சிறப்புகள்
உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அந்த நாட்டின் மொழி அந்த நாட்டின் மக்கள் அந்த நாட்டின் கலாச்சாரம் நமக்கு அந்நியமாகத் தெரியலாம். ஆனால் அங்குள்ள மஸ்ஜிதுக்குச் சென்றால் நமது ஊர் பள்ளிவாசலில் கேட்ட அதே ஃபாத்திஹா சூரா... அதே அஸ்ஸலாமு அலைக்கும்.. ஆக ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒற்றுமையின் சின்னம் ஃபாத்திஹா சூரா.
ஃபாத்திஹா சூராவின் பல்வேறு சிறப்புப் பெயர்கள்
سُورَة الْفَاتِحَة . يُقَال لَهَا الْفَاتِحَة أَيْ فَاتِحَة الْكِتَاب خَطًّا وَبِهَا تُفْتَح الْقِرَاءَة فِي الصَّلَوَات وَيُقَال لَهَا أَيْضًا أُمّ الْكِتَاب عِنْد الْجُمْهُور (تفسير ابن كثير)
சூரா ஃபாத்திஹா திருக் குர்ஆனின் முக்கியமான சூராவாகும். இதற்கு உம்முல் குர்ஆன் குர்ஆனின் தாய் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. காரணம் இது குர்ஆனின் மற்ற அனைத்து சூராக்களின் கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது என்பதால் அந்தப் பெயர் ஏற்பட்டது.
திருக்குர்ஆனின் மையக்கரு
1.இறைவனை ஈமான் கொண்டு அவனை வணங்குதல் 2.அவனிடமே உதவி தேடுதல் 3.நேரான வழி அறிந்து அதன் படி நடக்குதல் 4.நேரான வழியில் சென்றதால் அல்லாஹ்வின் அருளை அடைதல் 5.வழி தவறியவர்களின் வழியைவிட்டும் தவிர்த்துக் கொள்ளுதல். இந்த ஐந்து விஷயங்கள் திருக் குர்ஆனின் மையக் கருத்துக்களாகும். அப்படிப்பட்ட சிறப்பான விஷயங்களை உள்ளடக்கியது சூரா ஃபாத்திஹா.
وَيُقَال لَهَا " الشِّفَاء " لِمَا رَوَاهُ الدَّارِمِيّ عَنْ أَبِي سَعِيد مَرْفُوعًا " فَاتِحَة الْكِتَاب شِفَاء مِنْ كُلّ سُمّ"(تفسير ابن كثير)
சூரா ஃபாத்திஹாவுக்கு ஷிஃபா என்றும் பெயர் உண்டு.
அபூஸயீத் ரழி அவர்கள் கூறினார்கள். சூரா ஃபாத்திஹா அனைத்து விஷங்களுக்கும் மருந்தாகும்
عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ انْطَلَقَ نَفَرٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرُوهَا حَتَّى نَزَلُوا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَاسْتَضَافُوهُمْ فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمْ فَلُدِغَ سَيِّدُ ذَلِكَ الْحَيِّ فَسَعَوْا لَهُ بِكُلِّ شَيْءٍ لَا يَنْفَعُهُ شَيْءٌ فَقَالَ بَعْضُهُمْ لَوْ أَتَيْتُمْ هَؤُلَاءِ الرَّهْطَ الَّذِينَ نَزَلُوا لَعَلَّهُ أَنْ يَكُونَ عِنْدَ بَعْضِهِمْ شَيْءٌ فَأَتَوْهُمْ فَقَالُوا يَا أَيُّهَا الرَّهْطُ إِنَّ سَيِّدَنَا لُدِغَ وَسَعَيْنَا لَهُ بِكُلِّ شَيْءٍ لَا يَنْفَعُهُ فَهَلْ عِنْدَ أَحَدٍ مِنْكُمْ مِنْ شَيْءٍ فَقَالَ بَعْضُهُمْ نَعَمْ وَاللَّهِ إِنِّي لَأَرْقِي وَلَكِنْ وَاللَّهِ لَقَدْ اسْتَضَفْنَاكُمْ فَلَمْ تُضَيِّفُونَا فَمَا أَنَا بِرَاقٍ لَكُمْ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا فَصَالَحُوهُمْ عَلَى قَطِيعٍ مِنْ الْغَنَمِ فَانْطَلَقَ يَتْفِلُ عَلَيْهِ وَيَقْرَأُ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ فَكَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ فَانْطَلَقَ يَمْشِي وَمَا بِهِ قَلَبَةٌ قَالَ فَأَوْفَوْهُمْ جُعْلَهُمْ الَّذِي صَالَحُوهُمْ عَلَيْهِ فَقَالَ بَعْضُهُمْ اقْسِمُوا فَقَالَ الَّذِي رَقَى لَا تَفْعَلُوا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَذْكُرَ لَهُ الَّذِي كَانَ فَنَنْظُرَ مَا يَأْمُرُنَا فَقَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا لَهُ فَقَالَ وَمَا يُدْرِيكَ أَنَّهَا رُقْيَةٌ ثُمَّ قَالَ قَدْ أَصَبْتُمْ اقْسِمُوا وَاضْرِبُوا لِي مَعَكُمْ سَهْمًا (بخاري)
அபூ சயீதுல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். சஹாபாக்களில் ஒரு குழுவினர் பயணம் மேற்கொண்டார்கள். அந்தப் பயணத்தில் ஒரு அரபுக்குலத்தார் வசித்த இடம் அருகில் தங்கினார்கள். நபித்தோழர்கள் அந்தக் குலத்தாரிடம் தமக்கு விருந்தளிக்கும்படி கேட்க, அவர்களுக்கு விருந்து தர அவர்கள் மறுத்து விட்டார்கள். பின்னர், அக்குலத்தாரின் தலைவரைத் தேள் கொட்டி விட்டது. ஆகவே அவருக்காக அ(க்குலத்த)வர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்து எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இங்கே நமக்கருகில் தங்கியிருக்கும் முஸ்லிம்களிடம் நீங்கள் சென்றால் (இதற்கு) அவர்களிடம் ஏதேனும் (மருந்து) இருக்கலாம்! என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களும் சஹாபாக்களிடம் வந்து, எங்கள் தலைவரை தேள் கொட்டி விட்டது. அவருக்காக அனைத்து முயற்சியும் செய்தோம். எதுவுமே அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது (மருந்து) ஏதும் உள்ளதா? என்று கேட்டனர். அப்போது சஹாபாக்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து கொடுக்காததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப்பார்க்க முடியாது! என்றார்.அவர்கள் (முப்பது ஆடுகள் கொண்ட) ஒரு ஆட்டு மந்தையை அளிப்பதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். அந்த சஹாபி தேளால் கொட்டப்பட்டவர் மீது ஃபாத்திஹா சூராவை ஓதி உமிழ்ந்தார். உடனே பாதிக்கப்பட்டவர் கட்டுகளில் இருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். எந்த வலியும் அவரிடம் தென்படவில்லை. பிறகு அவர்கள் பேசிய கூலியை முழுமையாக கொடுக்க, இதைப் பங்கு வையுங்கள்! என்று (நபித்தோழர்) ஒருவர் கூறிய போது, நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன உத்தரவிடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் பங்கிடக் கூடாது என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்ஹம்து அத்தியாயம் ருக்யா (ஓதிப் பார்க்கத் தக்கது) என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு, நீங்கள் செய்தது சரி தான்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்ளுங்கள்! என்று கூறினார்கள். புகாரி 5749)
மேற்காணும் ஹதீஸில் அடிப்படையில் ருக்யா என்றும் ஃபாத்திஹா சூராவுக்குப் பெயர் கூறப்படும்.
عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى قَالَ مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أُصَلِّي فَدَعَانِي فَلَمْ آتِهِ حَتَّى صَلَّيْتُ ثُمَّ أَتَيْتُ فَقَالَ مَا مَنَعَكَ أَنْ تَأْتِيَنِي فَقُلْتُ كُنْتُ أُصَلِّي فَقَالَ أَلَمْ يَقُلْ اللَّهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ} ثُمَّ قَالَ أَلَا أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ مِنْ الْمَسْجِدِ فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَخْرُجَ مِنْ الْمَسْجِدِ فَذَكَّرْتُهُ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ هِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ (بخاري)
அபூ சயீத் இப்னுல் முஅல்லா ரழி அவர்கள் கூறினார்கள் நபி ஸல் அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். நான் தொழுது கொண்டிருந்தேன் அப்போது என்னை அழைத்தார்கள். நான் தொழுது முடித்து விட்டு அவர்களிடம் வந்தேன். அப்போது நபி ஸல் அவர்கள் நான் அழைத்த பிறகும் உம்மை வர விடாமல் எது தடுத்த து என்று கேட்டார்கள். அதற்கு நான் தொழுது கொண்டிருந்தேன் அதனால் நான் வரவில்லை என்றேன். அதற்கு நபி ஸல் அவர்கள் அல்லாஹ் குர்ஆனில் அல்லாஹ்வும் அவனது தூதரும் அழைத்தால் உடனே பதில் தர வேண்டும் என்று கூறவில்லையா என்று என்னிடம் கூறி விட்டு, குர்ஆனில் மிகப் பெரும் அந்தஸ்துள்ள சூராவை இந்த மஸ்ஜிதை விட்டும் வெளியேறும் முன்பு உமக்கு நான் அறிவிக்க வேண்டாமா என்று கூறினார்கள். பின்பு நபி ஸல் அவர்கள் மஸ்ஜிதை விட்டும் கடந்து செல்லும்போது நான் ஞாபகப் படுத்தினேன். அப்போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். எனக்கு வழங்கப்பட்ட ஏழு வசனங்கள் கொண்ட அல்ஹம்து சூராதான் அந்த சூராவாகும் என்றார்கள்.
عَنْ سَعِيد بْن جُبَيْر عَنْ اِبْن عَبَّاس قَالَ : بَيْنَا رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْده جِبْرَائِيل إِذْ سَمِعَ نَقِيضًا فَوْقه فَرَفَعَ جِبْرِيل بَصَره إِلَى السَّمَاء فَقَالَ " هَذَا بَاب قَدْ فُتِحَ مِنْ السَّمَاء مَا فُتِحَ قَطُّ " قَالَ فَنَزَلَ مِنْهُ مَلَك فَأَتَى النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : " أَبْشِرْ بِنُورَيْنِ قَدْ أُوتِيتهمَا لَمْ يُؤْتَهُمَا نَبِيّ قَبْلَك فَاتِحَة الْكِتَاب وَخَوَاتِيم سُورَة الْبَقَرَة لَمْ تَقْرَأ حَرْفًا مِنْهَا إِلَّا أُوتِيته " (نسَائِيّ)
ஒருமுறை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்னிலையில் இருந்தபோது வானில் இருந்து ஒரு சப்தம் கேட்டது. அப்போது ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள். இது வானத்தின் கதவுகளில் ஒரு கதவு திறக்கப் படும் சப்தமாகும். இதுவரை இந்தக் கதவு திறக்கப்பட்டதில்லை என்றார்கள் சற்று நேரத்தில அதன் வழியாக ஒரு வானவர் இறங்கி வந்தார். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் அமர்ந்து அல்லாஹ்வின் தூதரே இதுவரை நான் இந்த பூமிக்கு வந்ததில்லை. என்னை இந்த பூமிக்கு அல்லாஹ் அனுப்பி இரண்டு சுபச் செய்திகளை உங்களிடம் கூறி விட்டு வர அல்லாஹ் அனுப்பினான் என்றார்.1. ஃபாத்திஹா சூரா 2. சூரா பகராவின் கடைசி இரண்டு வசனங்கள். இந்த இரண்டிலும் உள்ள துஆக்களை ஓதி யார் அதன் பொருட்டால் அல்லாஹ் தஆலாவிடம் கேட்பார்களோ அவர்களுக்கு அது கொடுக்கப்படும். அல்லது அதன் நன்மைகள் உடனடியாக உங்களுக்குக் கொடுக்கப்படும். நூல்- மிஷ்காத்
இப்லீஸ் தன் தலை மீது மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு அழுத நான்கு தருணங்கள்
عن مجاهد قال: إن إبليس - لعنه الله - رنّ أربع رنات: حين لعن وحين أهبط من الجنة وحين بعث محمد صلى الله عليه وسلم وحين أنزلت فاتحة الكتاب، (قرطبي)
இப்லீஸ் தன் தலை மீது மண்ணை வாரிப் போட்டுக் கொண்டு அழுத நான்கு தருணங்கள் 1. அவன் சபிக்கப்பட்ட போது 2. அவன் இந்த பூமிக்கு இறக்கப்பட்ட போது 3.நபி ஸல் அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைத்த போது 4. ஃபாத்திஹா சூரா இறக்கப்பட்ட போது
ஃபாத்திஹா சூரா செய்த மாபெரும் அற்புதம்
அல்லாஹ்வுடைய திருவசனங்களின் அற்புதமான சக்தியை விளக்க ஃபகீஹுல் உம்மத், ஹழ்ரத், முஃப்தி மஹ்மூதுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் அற்புதமான சம்பவம் ஒன்றைக் கூறியுள்ளார்கள். ஒரு இளவரசர் நோயுற்றார். அவருக்கு அக்காலத்தின் புகழ் பெற்ற மருத்துவர் அபூ அலி இப்னு சீனா சிகிச்சை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெரியார் இளவரசரைச் சந்தித்து நலம் விசாரிக்க வந்தார். இளவரசரின் வயிற்றின் மீது கை வைத்து ஏதோ ஓதி ஊதினார். அதைப் பார்த்த அபூ அலி இப்னு சீனா இந்த முதியவர் என்ன செய்கிறார். இந்த வார்த்தைகளுக்கு என்ன சக்தி இருக்கப் போகிறது. வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிப்பட்டு காற்றில் கலந்து விடக்கூடியவை. இதனால் எதுவும் நடந்து விடாது. இவரின் வயிற்றில் கெட்ட நீர் கட்டி பிடித்துள்ளது. சூடான மருந்து கொடுங்கள். அது கரையும் என்று கூற, அதுகேட்டு மிகவும் கோபமடைந்த அந்தப் பெரியார் நாயே நீ என்ன சொன்னாய் என்றார். உடனே அபூ அலி இப்னு சீனாவின் முகம் மாறியது. முகம் சிவந்து விட்டது. அப்பெரியார் மறு முறையும் ஓதி ஊதி விட்டு, கழுதையே இப்போது உனக்கு விளங்கவில்லையா என அபூஅலி இப்னு சீனாவை நோக்கி கத்தினார். மருத்துவர் அபூ அலி இப்னு சீனாவின் முகம் மிகவும் சிவந்து விட்டது. அப்போது அப்பெரியார் அபூஅலி இப்னு சீனாவை நோக்கி மருத்துவரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது. இப்படி முகம் சிவந்து விட்டது.நான் பேசியது வெறும் வார்த்தைகள்தானே. காற்றில் கலந்து விடும் இந்த வார்த்தைகளால் உங்கள் முகம் இப்படி சிவந்து விட்டதே! என்று கூறிய பிறகு தான் அபூஅலி இப்னு சீனாவுக்கு அந்தப் பெரியவர் எதற்காக தன்னைத் திட்டினார் என்று புரிந்தது. வார்த்தைகளுக்கும் உடலின் தன்மையை மாற்றி விடும் வலிமை உள்ளது என்று புரிந்து கொண்டார். அல்லாஹ்வின் அருளால் நீண்ட நேரம் சிகிச்சை செய்தும் கிடைக்காத பலன் அந்தப் பெரியார் ஓதி ஊதியதால் கிடைத்தது. இளவரசர் வயிற்றில் இருந்த கட்டி கரைந்து அவர் நலம் பெற்றார்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الْإِمَامُ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} فَقُولُوا آمِينَ فَمَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ (بخاري)
இமாம் வலழ் ழால்லீன் என்று கூறினால் நீங்கள் அவருடன் இணைந்து ஆமீன் கூறுங்கள். யாருடைய ஆமீன் மலக்குகளின் ஆமீனோடு இணைந்து விடுகிறதோ அவருடைய முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.
படிப்பினை- ஆமீன் கூற வேண்டும் என்பதில் இமாம்களிடம் கருத்து வேறுபாடு கிடையாது. சப்தமாக கூற வேண்டுமா அல்லது மெதுவாக கூற வேண்டும் என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.
No comments:
Post a Comment