Monday, March 3, 2025

நான்காவது தராவீஹ்

 بسم الله الرحمن الرحيم

  நான்காவது தராவீஹ்

அமானிதம் பேணுவதின் பல்வேறு வகைகள்

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا (58)

நல்லவர்கள் அமானிதம் பேணுபவர்களாக இருப்பார்கள் என அல்லாஹ் புகழ்கிறான். அமானிதம் என்பதற்கு பல அர்த்தங்கள்

பொதுவாக அமானிதம் பற்றி வந்துள்ள நபிமொழி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கரையின்மையால்) சீர்கெட்டு, கருத்து வேறுபாடும் கொள்வார்கள்'' என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, ''அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், ''அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விஷயத்தில் ஈடுபடுங்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ர¬லி) நூல்: அபூதாவூத் (3779)

நம்பகத்தன்மையும் அமானிதம் தான்

இறுதி நாள் நெருக்கத்தில் நம்பகத்தன்மை தான் முதலில் மக்களிடமிருந்து எடுக்கப்படும்

عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما تفقدون من دينكم الأمانة ثم الصلاة (الأحاديث المختارة للضياء

عن عبد الله بن مسعود قال : أول ما تفقدون من دينكم الأمانة وآخر ما تفقدون الصلاة وسيصلي أقوام لا دين لهم (بيهقي

தீனைக் கடைபிடிக்கும் மக்களிடமிருந்து முதலில் அமானிதம் இல்லாமல் போகும். அதன் பின்பு தொழுகையும் இல்லாமல் போகும். சிலர் தொழுகையை சரியாக நிறைவேற்றுவார்கள் ஆனால் அவர்களிடம் தீனின் மற்றொரு பங்கு (அமானிதத்தை முறையாக நிறைவேற்றுதல்) என்பது இருக்காது

நம்பகத்தன்மை மிகவும் குறைந்து விட்டால் உலகம் பல ஆபத்துகளை தொடர்ந்து சந்திக்கும்

عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافه شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع " . رواه الترمذي

1.பொதுச்சொத்துக்களில் ஊழல் 2.அமானித துஷ்பிரயோகம் 3. ஜகாத்தை சுமையாக கருதுவது 4. மார்க்கத்தை வேறு நோக்கத்திற்காக கற்பது. 5.மனைவிக்கு அடி பணிவது 6. தாய் தந்தையை வெறுப்பது 7. நண்பனை நெருக்கமாக்கிக் கொள்வது 8.மஸ்ஜித்களில் வீண் சப்தம் 9.தகுதியற்றவர்கள் தலைவராகுவது 10.தகுதியுள்ளவர் ஒதுக்கப்படுவது 11. ஒருவன் தீமையை பயந்து அவனுக்கு மரியாதை செலுத்துவது 12. இசை 13. இசைக் கேற்ப நடனமாடும் பெண்கள் அதிகமாகுவது 14. மது அதிகமாகுவது 15. முன்னோர்களான நல்லவர்களைக் குறை கூறுவது.மேற்படி பாவங்கள் உலகில் பெருகி விட்டால் சோதனைகள் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்றால் தஸ்பீஹ் மணி அறுந்து விழுந்தால் எவ்வாறு தொடர்ச்சியாக அதன் பாசிமாலைகள் சரசரவென விழுமோ அது போன்று தொடர்ந்து ஏதேனும் அசம்பாவிதம் பூமியில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

அமானிதம் என்பதற்கு நம்மிடம் ஒப்படைத்ததை அப்படியே திருப்பித் தருவது என்ற பொருளும் உண்டு

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا (75)ال عمران بِقِنْطَارٍ" أَيْ بِمَالٍ كَثِير "يُؤَدِّهِ إلَيْك" لِأَمَانَتِهِ كَعَبْدِ اللَّه بْن سَلَام أَوْدَعَهُ رَجُل أَلْفًا وَمِائَتَيْ أُوقِيَّة ذَهَبًا فَأَدَّاهَا إلَيْهِ "وَمِنْهُمْ مَنْ إنْ تَأْمَنهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إلَيْك" لِخِيَانَتِهِ "إلَّا مَا دُمْت عَلَيْهِ قَائِمًا" لَا تُفَارِقهُ فَمَتَى فَارَقْته أَنْكَرَهُ كَكَعْبِ بْن الْأَشْرَف اسْتَوْدَعَهُ قُرَشِيّ دِينَارًا فَجَحَدَهُ (تفسير الجلالين

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழி அவர்களிடம் ஒருவர் ஆயிரத்து இருநூறு ஊகியா தங்கத்தைக் கொடுத்து வைத்தார். அதை அவர் கேட்கும்போது அப்படியே திருப்பித் தந்தார்கள். ஒரு ஊகியா என்பது 38 கிராம். ஆனால் கஃப் இப்னு அஷ்ரஃபிடம் ஒரு தீனாரை ஒருவர் கொடுத்து வைத்து திரும்பக் கேட்டபோது அவன் நீ தரவில்லை என மறுத்து விட்டான்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ (بخاري

ஹிஜ்ரத் புறப்படும்போது நபி ஸல் அவர்கள் ஆபத்தான சூழ்நிலையிலும் அலீ ரழி அவர்களை மக்காவில் விட்டுச் சென்ற காரணம் அமானிதங்களை அவரவரிடம் ஒப்படைப்பதற்குத்தான்.

وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِنْ رَبِّكَ (82) كهف - قال ابن عباس حفظا بصلاح أبيهما ولم يذكر منهما صلاحا وقال جعفر بن محمد كان بينهما وبين ذلك الأب الصالح سبعة آباء وقال مقاتل كان أبوهما ذا أمانة (تفسير زاد المسير

இந்த சிறுவர்களின் ஏழாவது தலைமுறையில் வாழ்ந்த தந்தை அமானிதத்தைப் பேணிப்பாதுகாப்பதில் மக்களிடம் சிறந்து விளங்கினார். அவரை நம்பி மக்கள் அவரிடம் எதையும் ஒப்படைப்பார்கள். அவர் சிறந்த நல்லடியாராக இருந்ததால் அவரது சந்ததியில் வந்த இந்த அநாதைச் சிறுவர்களின் சொத்தை கிழ்ர் அலை மூலம் அல்லாஹ் பாதுகாத்தான்.

إن عمر لما طلب تزكية أحد الشهود فزكاه رجل ، قال له عمر: هل جاورته؟ قال : لا ، قال : هل تعاملت معه في بيع وشراء؟ قال : لا ، قال: هل سافرت معه؟ قال: لا، قال: فأنت لا تعرفه (شرح بلوغ المرام

  ஒரு மனிதரை சாட்சிக்காக உமர் ரழி அவர்கள் அழைப்பதாக இருந்தார்கள். அதற்கு முன்பு அவரைப் பற்றி மற்றொருவரிடம் விசாரித்தார்கள். அப்போது அவர் அந்த மனிதரைப் பற்றி நல்ல விதமாக கூறினார். அப்போது உமர் ரழி அவர்கள் எதை வைத்து நல்லவர் என்று அவரைக் கூறுகிறீர்கள் அவருக்கு பக்கத்து வீட்டில் வசித்தீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அவரோடு கொடுக்கல் வாங்கல் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார் அவரோடு பிரயாணம் செய்துள்ளீரா என்று கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது உமர் ரழி கூறினார்கள். அப்படியானால் அவரைப் பற்றி உனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள் மற்றொரு அறிவிப்பில் உமர் ரழி அவர்கள் அந்த மனிதர் மஸ்ஜிதில் தொழுவதைப் பார்த்து விட்டு வந்து அவரைப் பற்றி நல்லவர் என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியதாக வந்துள்ளது.

பொறுப்புகளும் அமானிதம்

 நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பொறுப்பையாவது பெற்றிருப்போம். நாம் ஏற்றிருக்கக்கூடிய பொறுப்பை உணர்ந்து அதற்குத் தக்கவாறு நாம் செயல்பட வேண்டும். நமது கடமைகளை முறையாக செய்யத் தவறினால் அமானிதத்தைப் பாழ்படுத்திய குற்றத்தைச் செய்தவராகி விடுவோம். மக்களை வழிநடத்தும் பதவியில் இருப்பவர்கள் அமானிதத்தை ஏற்றிருக்கிறார்கள். முறையான ஆட்சி புரியாவிட்டால் இறைவனிடத்தில் அவர்களால் தப்ப முடியாது.

عَنْ أَبِى ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَلاَ تَسْتَعْمِلُنِى قَالَ فَضَرَبَ بِيَدِهِ عَلَى مَنْكِبِى ثُمَّ قَالَ « يَا أَبَا ذَرٍّ إِنَّكَ ضَعِيفٌ وَإِنَّهَا أَمَانَةٌ وَإِنَّهَا يَوْمَ الْقِيَامَةِ خِزْىٌ وَنَدَامَةٌ إِلاَّ مَنْ أَخَذَهَا بِحَقِّهَا وَأَدَّى الَّذِى عَلَيْهِ فِيهَا ».

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ''அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (எதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள் பட்டையில் அடித்துவிட்டு, ''அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதைக் கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு, தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ர¬லி) நூல்: முஸ்¬லிம் 3729

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَجْلِسٍ يُحَدِّثُ الْقَوْمَ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ مَتَى السَّاعَةُ فَمَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ سَمِعَ مَا قَالَ فَكَرِهَ مَا قَالَ وَقَالَ بَعْضُهُمْ بَلْ لَمْ يَسْمَعْ حَتَّى إِذَا قَضَى حَدِيثَهُ قَالَ أَيْنَ أُرَاهُ السَّائِلُ عَنْ السَّاعَةِ قَالَ هَا أَنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِذَا ضُيِّعَتْ الْأَمَانَةُ فَانْتَظِرْ السَّاعَةَ قَالَ كَيْفَ إِضَاعَتُهَا قَالَ إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرْ السَّاعَة (بخاري)

 ஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். ''மறுமை நாள் எப்போது?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், ''நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை'' என்றனர். வேறு சிலர், ''அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை'' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, ''மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?'' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) ''அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்'' என்றார். அப்போது ''அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கவர், ''அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' எனக் கேட்டார். அதற்கு, ''எந்தக் காரியமாயினும் அது தகுதி அற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர¬லி) நூல்: புகாரி (59)

ஒருவர் ஒரு பொருளை வாங்குவதற்காகக் குறிப்பிட்ட தொகையை தன்னிடம் தந்தால் வாங்கிய விலையை விட அதிகமாகக் கூறி அவரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் பின்வரும் செய்தியை மனதில் நிலை நிறுத்த வேண்டும்.

عَنْ أَبِى لَبِيدٍ حَدَّثَنِى عُرْوَةُ بْنُ أَبِى الْجَعْدِ الْبَارِقِىُّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- لَقِىَ جَلَبًا فَأَعْطَاهُ دِينَارًا فَقَالَ « اشْتَرِ لَنَا شَاةً ». قَالَ فَانْطَلَقَ فَاشْتَرَى شَاتَيْنِ بِدِينَارٍ فَلَقِيَهُ رَجُلٌ فَبَاعَهُ شَاةً بِدِينَارٍ قَالَ فَجَاءَ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- بِشَاةٍ وَدِينَارٍ قَالَ فَقَالَ لَهُ النَّبِىُّ -صلى الله عليه وسلم- « بَارَكَ اللَّهُ تَعَالَى لَكَ فِى صَفْقَةِ يَمِينِكَ ». قَالَ فَإِنِّى كُنْتُ لأَقُومُ بِالْكُنَاسَةِ فَمَا أَبْرَحُ حَتَّى أَرْبَحَ أَرْبَعِينَ أَلْفًا. (دار قطني

 நபி (ஸல்) அவர்கள் தனக்காக ஒரு ஆட்டை வாங்குவதற்காக உர்வா (ர¬லி) அவர்களிடம் ஒரு தீனாரை (பொற்காசைக்) கொடுத்தார்கள். அதைக் கொண்டு அவர் இரண்டு ஆடுகளை வாங்கினார். அவ்விரண்டில் ஒன்றை அவர் ஒரு தீனாருக்கு விற்று விட்டு, ஒரு தீனாரையும் ஒரு ஆட்டையும் கொண்டு வந்தார். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அவரது வியாபாரத்தில் அவருக்கு பரக்கத் (எனும் அருள் வளம்) கிடைத்திடப் பிரார்த்தித்தார்கள். (அதன் பயனாக) அவர் மண்ணை வாங்கினாலும் அதில் இலாபமடைந்து விடுவார் என்ற நிலையில் இருந்தார். அறிவிப்பவர்: ஷபீப் பின் கர்கதா நூல்: புகாரி (3642)

No comments:

Post a Comment

இருபத்தேழாவது தராவீஹ்

 28-03-2025 RAMZAN – 27 بسم الله الرحمن الرحيم   27 வது இரவு பயான்  https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES ...