இரண்டாவது தராவீஹ் பயான்
ஈமான் வலிமை இருந்தால் குறைந்த கூட்டம் பெரிய கூட்டத்தை வெல்லும்
فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُ தீمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ (249)البقرة عَنْ الْبَرَاءِ قَالَ كُنَّا أَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَحَدَّثُ أَنَّ عِدَّةَ أَصْحَابِ بَدْرٍ عَلَى عِدَّةِ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهَرَ وَلَمْ يُجَاوِزْ مَعَهُ إِلَّا مُؤْمِنٌ بِضْعَةَ عَشَرَ وَثَلَاثَ مِائَةٍ (بخاري) باب عِدَّةِ أَصْحَابِ بَدْرٍ- المغازى
ஜாலூத் என்ற சர்வாதிகாரியை அழிக்க ஜோர்டான் நதியை ஒட்டி இஸ்ரவேலர்களை வழி நடத்திச் சென்ற தாலூத் தம் சமுதாய மக்களில் துணிச்சல் மிக்கவர்களை மட்டுமே தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக அல்லாஹ்வின் உத்தரவின் படி இச் சோதனையை நடத்தினார். புறப்படும்போது கொண்ட பல ஆயிரம் பேர் கொண்ட பெரும் படையாக இந்தப் படை புறப்பட்டது. ஆனால் அல்லாஹ்வின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டது பத்ருப் போரின் எண்ணிக்கை அளவிலான 313 பேர் மட்டும்தான். அதாவது செல்லும் வழியில் ஒரு ஆற்றைக் கடந்து செல்லும்போது ஒரு சிரங்கை தண்ணீருக்கு மேல் அருந்தக் கூடாது என்று அல்லாஹ்வின் உத்தரவு இருந்தது. பலர் தங்களின் மனதில் தண்ணீர் நிறைய குடித்தால் தானே தெம்பாக போர் செய்யலாம் என்று எண்ணி அல்லாஹ்வின் உத்தரவை மீறி நிறைய குடித்தனர். அவ்வாறே குடித்தவர்கள் அனைவரும் அங்கேயே சோர்ந்து விட்டனர். அல்லாஹ்வின் உத்தரவின் படி ஒரு சிரங்கை அளவு மட்டும் குடித்தவர்கள் 313 பேர் தான். அவர்கள் உற்சாகமாக போரிட்டனர். அல்லாஹ் வெற்றியைத் தந்தான்.
وقال الزمخشري : كان أبو داود في عسكر طالوت مع ستة من بنيه ، وكان داود سابعهم وهو صغير يرعى الغنم ، فأوحى إلى شمويل أن داود بن إيشا يقتل جالوت ، فطلبه من أبيه ، فجاء وقد مرّ في طريقه بثلاثة أحجار دعاه كل واحد منها أن يحمله ، وقالت له : إنك تقتل بنا جالوت ، فحملها في مخلاته ، ورمى بها جالوت فقتله ، وزوجه طالوت بنته (تفسير البحر المحيط) ذكر في القرطبي طويلا
இச்சம்பவம் குர்துபீயில் விரிவாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
மேற்படி போரில் தனது தந்தையுடன் தாவூத் அலைஹிஸ்ஸலாம் கலந்து கொண்டார்கள் அப்போது அவர்கள் இளைஞராக இருந்தார்கள். உடன் பிறந்த அண்ணன்கள் ஆறு பேருடன் அதில் கலந்து கொண்டார்கள். அல்லாஹ் அவர்களின் நபியான ஷம்வீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹீ அறிவிக்கும்போது ஜாலூத் என்ற கொடியவனின் மரணம் இந்த தாவூத் முலம் தான் ஏற்படும் என செய்தி அறிவித்தான். தாவூத் அலைஹிஸ்ஸலாம் அதைக் கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள். போருக்குச் செல்லும் வழியில் ஒரு கல் அவர்களிடம் பேசியது. என்னை எடுத்துக் கொள். ஜாலூத்தைக் கொள்வதற்கு நான் உனக்கு உதவியாக இருப்பேன் என்று கூறியது அதை எடுத்து தன் பையில் போட்டுக் கொண்டார்கள். சற்று தூரத்தில் மற்றொரு கல் என்னையும் எடுத்துக் கொள். ஜாலூத்தைக் கொள்வதற்கு நான் உனக்கு உதவியாக இருப்பேன் என்று கூறியது அதையும் எடுத்து தன் பையில் போட்டுக் கொண்டார்கள். இன்னும் சற்று தூரத்தில் மற்றொரு கல் என்னையும் எடுத்துக் கொள். ஜாலூத்தைக் கொள்வதற்கு நான் உனக்கு உதவியாக இருப்பேன் என்று கூறியது அதையும் எடுத்து தன் பையில் போட்டுக் கொண்டார்கள்.
போர் தொடங்கியவுடன் மிக உயரமான பருமனான உடலமைப்பு கொண்ட மனிதனான ஜாலூத் தன்னை எதிர்த்து நின்ற தாவூத் அலை அவர்களை நோக்கி நீ ஒரு பொடிப்பையன். உன்னை நான் என் கையால் நசுக்கி விடுவேன் என்றான். அப்போது தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன் பையில் இருந்த கற்களை எடுத்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அந்த மூன்றும் ஒரே கல்லாக மாறியிருந்தது. அதை எடுத்து பிஸ்மில்லாஹ் சொல்லி எறிந்தார்கள். அது ஜாலூத்தின் நெற்றி வழியாக நுழைந்து பின் மண்டை வழியாக வெளியே வந்தது மட்டுமன்றி அவனுக்குப் பின்னால் இருந்தவர்களையும் பதம் பார்த்தது.
ஈமான் வலிமையுடன் போரிடுபவர்களுக்கு அறியாப் புறத்தில் இருந்து உதவி வரும்
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا (9)الاحزاب
ஹிஜ்ரி 5-ம் ஆண்டு நடந்த அகழ்ப்போரைப் பற்றி இந்த வசனம் குறிப்பிடுகிறது
يقُول تَعَالَى مُخْبِرًا عَنْ نِعْمَته وَفَضْله وَإِحْسَانه إِلَى عِبَاده الْمُؤْمِنِينَ فِي صَرْفه أَعْدَاءَهُمْ وَهَزْمه إِيَّاهُمْ عَام تَأَلَّبُوا عَلَيْهِمْ وَتَحَزَّبُوا وَذَلِكَ عَام الْخَنْدَق وَذَلِكَ فِي شَوَّال سَنَة خَمْس مِنْ الْهِجْرَة عَلَى الصَّحِيح الْمَشْهُور (تفسير ابن كثير
وَكَانَ سَبَب قُدُوم الْأَحْزَاب أَنَّ نَفَرًا مِنْ أَشْرَاف يَهُود بَنِي النَّضِير الَّذِينَ كَانُوا قَدْ أَجَلَاهُمْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْمَدِينَة إِلَى خَيْبَر مِنْهُمْ سَلَّام بْن أَبِي الْحَقِيق وَسَلَّامُ بْن مشكم وَكِنَانَة بْن الرَّبِيع خَرَجُوا إِلَى مَكَّة فَاجْتَمَعُوا بِأَشْرَافِ قُرَيْش وَأَلَّبُوهُمْ عَلَى حَرْب النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَوَعَدُوهُمْ مِنْ أَنْفُسهمْ النَّصْر وَالْإِعَانَة فَأَجَابُوهُمْ إِلَى ذَلِكَ ثُمَّ خَرَجُوا إِلَى غَطَفَان فَدَعَوْهُمْ فَاسْتَجَابُوا لَهُمْ أَيْضًا وَخَرَجَتْ قُرَيْش فِي أَحَابِيشهَا وَمَنْ تَابَعَهَا وَقَائِدهمْ أَبُو سُفْيَان صَخْر بْن حَرْب وَعَلَى غَطَفَان عُيَيْنَةَ بْن حِصْن بْن بَدْر وَالْجَمِيع قَرِيب مِنْ عَشَرَة آلَاف فَلَمَّا سَمِعَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِمَسِيرِهِمْ أَمَرَ الْمُسْلِمِينَ بِحَفْرِ الْخَنْدَق حَوْل الْمَدِينَة مِمَّا يَلِي الشَّرْق وَذَلِكَ بِإِشَارَةِ سَلْمَان الْفَارِسِيّ رَضِيَ اللَّه عَنْهُ فَعَمِلَ الْمُسْلِمُونَ فِيهِ وَاجْتَهَدُوا وَنَقَلَ مَعَهُمْ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ التُّرَاب وَحَفَرَ وَكَانَ فِي حَفْره ذَلِكَ آيَات وَدَلَائِل وَاضِحَات وَجَاءَ الْمُشْرِكُونَ فَنَزَلُوا شَرْقِيّ الْمَدِينَة قَرِيبًا مِنْ أُحُد وَنَزَلَتْ طَائِفَة مِنْهُمْ فِي أَعَالِي أَرْض الْمَدِينَة ..... كَمَا قَالَ اللَّه تَعَالَى " إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقكُمْ وَمِنْ أَسْفَل مِنْكُمْ " وَخَرَجَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ مَعَهُ مِنْ الْمُسْلِمِينَ وَهُمْ نَحْو مِنْ ثَلَاثَة آلَاف وَقِيلَ سَبْعمِائَةِ فَأَسْنَدُوا ظُهُورهمْ إِلَى سَلْع وَوُجُوههمْ إِلَى نَحْو الْعَدُوّ وَالْخَنْدَق حَفِير لَيْسَ فِيهِ مَاء بَيْنهمْ وَبَيْنهمْ يَحْجُب الْخَيَّالَة وَالرَّجَّالَة أَنْ تَصِل إِلَيْهِمْ وَجَعَلَ النِّسَاء وَالذَّرَارِيّ فِي آطَام الْمَدِينَة وَكَانَتْ بَنُو قُرَيْظَة وَهُمْ طَائِفَة مِنْ الْيَهُود لَهُمْ حِصْن شَرْق الْمَدِينَة وَلَهُمْ عَهْد مِنْ النَّبِيّ وَذِمَّة وَهُمْ قَرِيب مِنْ ثَمَانمِائَةِ مُقَاتِل فَذَهَبَ إِلَيْهِمْ حُيَيّ بْن أَخْطَبَ النَّضْرِيّ فَلَمْ يَزَلْ بِهِمْ حَتَّى نَقَضُوا الْعَهْد وَمَالَئُوا الْأَحْزَاب عَلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَعَظُمَ الْخَطْب وَاشْتَدَّ الْأَمْر وَضَاقَ الْحَال كَمَا قَالَ اللَّه تَبَارَكَ وَتَعَالَى" هُنَالِكَ اُبْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا زِلْزَالًا شَدِيدًا" وَمَكَثُوا مُحَاصِرِينَ لِلنَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابه قَرِيبًا مِنْ شَهْر إِلَّا أَنَّهُمْ لَا يَصِلُونَ إِلَيْهِمْ وَلَمْ يَقَع بَيْنهمْ قِتَال إِلَّا أَنَّ عَمْرو بْن عَبْد وُدّ الْعَامِرِيّ وَكَانَ مِنْ الْفُرْسَان الشُّجْعَان الْمَشْهُورِينَ فِي الْجَاهِلِيَّة رَكِبَ وَمَعَهُ فَوَارِس فَاقْتَحَمُوا الْخَنْدَق وَخَلَصُوا إِلَى نَاحِيَة الْمُسْلِمِينَ فَنَدَبَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ خَيْل الْمُسْلِمِينَ إِلَيْهِ فَقَالَ إِنَّهُ لَمْ يَبْرُز إِلَيْهِ أَحَد فَأَمَرَ عَلِيًّا رَضِيَ اللَّه عَنْهُ فَخَرَجَ إِلَيْهِ فَتَجَاوَلَا سَاعَة ثُمَّ قَتَلَهُ عَلِيّ رَضِيَ اللَّه عَنْهُ فَكَانَ عَلَامَة عَلَى النَّصْر .ثُمَّ أَرْسَلَ اللَّه عَزَّ وَجَلَّ عَلَى الْأَحْزَاب رِيحًا شَدِيدَة الْهُبُوب قَوِيَّة حَتَّى لَمْ يَبْقَ لَهُمْ خَيْمَة وَلَا شَيْء وَلَا تُوقَد لَهُمْ نَار وَلَا يَقَرّ لَهُمْ قَرَار حَتَّى اِرْتَحَلُوا خَائِبِينَ خَاسِرِينَ (تفسير ابن كثير
عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ نُصِرْتُ بِالصَّبَا وَأُهْلِكَتْ عَادٌ بِالدَّبُورِ.(بخاري
சுருக்கம்- ஒப்பந்தத்தை மீறியதால் நபி ஸல் அவர்கள் எந்த யூதர்களை நாடு கடத்தினார்களோ அப்படிப்பட்ட யூதர்களில் சிலர் மக்கா சென்று அங்குள்ள குறைஷிகளுடன் சேர்ந்து சுமார் பத்தாயிரம் நபர்கள் இணைந்து கொண்டனர். அவர்களை வழி நடத்தி வந்தவர் அபூ சுஃப்யான். இந்நிலையில் சுமார் பத்தாயிரம் நபர்கள் படை திரண்டு நம்மை எதிர்க்க வருகிறார்கள் என்ற தகவல் நபி ஸல் அவர்களுக்கு தாமதமாக கிடைத்த து. உடனே ஆலோசனை செய்தார்கள் சல்மான் ஃபார்ஸீ ரழி அவர்களின் ஆலோசனைப் படி மதீனாவைச் சுற்றி அகழ் தோண்டப்பட்டது. நபி ஸல் அவர்களும் நபித் தோழர்களும் பள்ளம் தோண்டுவதில் இரவு பகலாக ஈடு பட்டார்கள். இதனால் ஒரு சில தொழுகைகளும் களாவானது. இறுதியில் எதிரிகள் வந்தார்கள். அவர்களால் பள்ளங்களைத் தாண்டி வர முடியிவில்லை. ஆனாலும் அவர்கள் அங்கிருந்த படி அம்பெறிய முஸ்லிம்கள் இங்கிருந்த படி அம்பெறிய இப்படியே ஒரு மாத காலம் நீடித்தது. முஸ்லிம்கள் அந்த இடத்தை விட்டும் செல்ல முடியாமல் முற்றுகையிடப்பட்டதைப் போல ஆகி விட்டனர். இறுதியில் ஒரு மாதம் கழித்து அல்லாஹ் சபா என்ற புயல் காற்றை அனுப்பினான். அந்தக் காற்று எதிரிகள் உள்ள பகுதியில் மட்டும் வீசியது. எதிரிகள் விரண்டோடினர். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்தான். இதைப் பற்றி நபி ஸல் அவர்கள் கூறும்போது சபா என்ற காற்றைக் கொண்டு நான் உதவி செய்யப்பட்டேன். தபூர் என்ற காற்றைக் கொண்டு ஆது கூட்டம் அழிக்கப்பட்டது என்றார்கள். படிப்பினை. இப்போரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு அறிவிப்பில் 3000 என்றும் மற்றொரு அறிவிப்பில் 700 என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் எதிரிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதி கூட என்பது உறுதியான விஷயம். அவ்வாறு இருந்தும் அல்லாஹ் இறுதியில் வெற்றியைத் தந்தான். ஆனால் அந்த வெற்றி மிகவும் தாமதம் ஆனது. என்ன தான் சத்தியத்தில் முஸ்லிம்கள் இருந்தாலும் உடனே வெற்றியைத் தருவது அல்லாஹ் மீது கடமையில்லை.
எண்ணிக்கை பலத்தை விட ஈமானுடைய பலம் மிகவும் முக்கியமானது என்பதற்கு மற்றொரு சம்பவம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزَا نَبِيٌّ مِنْ الْأَنْبِيَاءِ فَقَالَ لِقَوْمِهِ لَا يَتْبَعْنِي رَجُلٌ مَلَكَ بُضْعَ امْرَأَةٍ وَهُوَ يُرِيدُ أَنْ يَبْنِيَ بِهَا وَلَمَّا يَبْنِ بِهَا وَلَا أَحَدٌ بَنَى بُيُوتًا وَلَمْ يَرْفَعْ سُقُوفَهَا وَلَا أَحَدٌ اشْتَرَى غَنَمًا أَوْ خَلِفَاتٍ وَهُوَ يَنْتَظِرُ وِلَادَهَا فَغَزَا فَدَنَا مِنْ الْقَرْيَةِ صَلَاةَ الْعَصْرِ أَوْ قَرِيبًا مِنْ ذَلِكَ فَقَالَ لِلشَّمْسِ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ اللَّهُمَّ احْبِسْهَا عَلَيْنَا فَحُبِسَتْ حَتَّى فَتَحَ اللَّهُ عَلَيْهِ فَجَمَعَ الْغَنَائِمَ فَجَاءَتْ يَعْنِي النَّارَ لِتَأْكُلَهَا فَلَمْ تَطْعَمْهَا فَقَالَ إِنَّ فِيكُمْ غُلُولًا فَلْيُبَايِعْنِي مِنْ كُلِّ قَبِيلَةٍ رَجُلٌ فَلَزِقَتْ يَدُ رَجُلٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَلْيُبَايِعْنِي قَبِيلَتُكَ فَلَزِقَتْ يَدُ رَجُلَيْنِ أَوْ ثَلَاثَةٍ بِيَدِهِ فَقَالَ فِيكُمْ الْغُلُولُ فَجَاءُوا بِرَأْسٍ مِثْلِ رَأْسِ بَقَرَةٍ مِنْ الذَّهَبِ فَوَضَعُوهَا فَجَاءَتْ النَّارُ فَأَكَلَتْهَا ثُمَّ أَحَلَّ اللَّهُ لَنَا الْغَنَائِمَ رَأَى ضَعْفَنَا وَعَجْزَنَا فَأَحَلَّهَا لَنَا (بخاري) كتاب فرض الخمس
விளக்கம்- நபிமார்களில் ஒரு நபி போருக்குப் புறப்படும்போது பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தன் உம்மத்தினரை போருக்கு அழைத்துச் சென்றார்கள். 1. புதிதாத திருமணம் நடந்து இன்னும் மனைவியுடன் சேராத எந்த ஆணும் என்னுடன் வர வேண்டாம்.. அதாவது புது மாப்பிள்ளை என்னுடன் வர வேண்டாம்.. 2. வீடு கட்டி அதன் மேல்தளம் அமைக்காத நபர் என்னுடன் வர வேண்டாம்.. அதாவது வீடு கட்டிக் கொண்டிருப்பவர் என்னுடன் வர வேண்டாம்.. 3. தனது ஆடு குட்டி போடுவதை எதிர் பார்த்துக் காத்திருப்பவரும் என்னுடன் வர வேண்டாம். என்றார்கள். காரணம் இவர்களெல்லாம் முழு ஈடுபாட்டோடு போர் செய்ய மாட்டார்கள் என்று கருதி அவ்வாறு கூறினார். அந்த நபி போர் செய்யும் இடைத்தை அடைய அஸர் ஆகி விட்டது. அப்போது சூரியனை நோக்கி பேசினார்கள். சூரியனே நீயும் குறிப்பிட்ட நேரத்தில் மறைய வேண்டும் என கட்டளையிடப் பட்டுள்ளாய். நானும் மஃரிபுக்குள் போரை முடிக்க வேண்டும் என கட்டளையிடப் பட்டுள்ளேன். என்று கூறி, பிறகு அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். அல்லாஹ்வே போர் முடியும் வரை சூரியனை மறைய விடாமல் தடுத்து நிறுத்து என துஆச் செய்ய, அவ்வாறே சூரியன் மறையாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. போரில் அல்லாஹ் அவருக்கு அதாவது முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்தான். பின்பு கனீமத் பொருட்கள் சேகரிக்கப்பட்டது. அக்காலத்தின் வழமைப்படி கனீமத் பொருட்கள் ஒரு மலை மீது வைக்கப்படும் அப்போது நெருப்பு வந்து அதைக் கரித்துகி கொண்டு சென்று விடும். அது தான் அந்த கனீமத் பொருட்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடையாளமாகும். அவ்வாறே அந்த கனீமத் பொருட்கள் வைக்கப்பட்டன. ஆனால் நெருப்பு வந்தது. அதைக் கரிக்கவில்லை அப்போது அந்த நபி கூறினார்கள். இங்கு வந்து சேர வேண்டியதில் ஏதோ ஊழல் நடந்துள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத் தலைவரும் என்னிடம் கை கொடுக்க வேண்டும் என்றார்கள். அவ்வாறே கை கொடுத்த போது அவர்களில் ஒருவரின் கை அந்த நபியின் கையுடன் ஒட்டிக் கொண்டது, அப்போது அந்த நபி கூறினார்கள். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் என்னிடம் கை கொடுக்க வேண்டும். அவ்வாறே கை கொடுத்த போது அவர்களில் இருவரின் கைகள் அந்த நபியின் கையுடன் ஒட்டிக் கொண்டது. உடன் அந்த நபி கூறினார்கள். நீங்கள் தான் ஏதோ ஒளித்து வைத்துள்ளீர்கள். அதை எடுத்து வாருங்கள். என்று கூற, அவ்விருவரும் தங்கத்தால் செய்யப்பட்ட மாட்டின் தலையைப் போன்ற ஒரு தலையைக் கொண்டு வந்தார்கள். அதையும் சேர்த்து மலை மீது வைத்த பின்பு நெருப்பு வந்து அதை கரித்துக் கொண்டு சென்றது. இதைக் கூறிய பின்பு நபி ஸல் கூறினார்கள். இந்த உம்மத்துக்கு அல்லாஹ் கனீமத் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளான் ஆனால் முந்திய உம்மத்துக்கு அனுமதிக்கப் படவில்லை
No comments:
Post a Comment